Pages

Search This Blog

Saturday, July 30, 2011

எலுமிச்சம்பழம் ரசம்

தேவையானவை:
எலுமிச்சம்பழம் : 2
சீரகம : 1 டீஸ்பூன்
பூண்டு : 2
உப்பு, மல்லித்தழை : சிறிதளவு
தக்காளிப்பழம : 1 டீஸ்பூன்
வற்றல : 2

செய்முறை:

1/2 லிட்டர் தண்ணீ¡¢ல் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாழித்து நுரைகூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்க்கவும். டிப்ஸ்; இது உடம்புக்கு நல்லது. எலுமிச்ச பழத்துக்கு பதிலாக புளி சேர்த்து தயார் செய்யலாம்.
 
சுண்டைக்காய் குழம்பு

செய்முறை:

200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும் 2 பொ¢ய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உ¡¢த்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளிக்காய்ச்சல், அரைத்த சீரகம், 1 சிட்டிகை மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். மிதமான தீயில் வைக்கவும். சுண்டைக்காய் குழம்பில் எண்ணெய் மிதந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
 

No comments:

Post a Comment