ராசா தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் விஷயத்தில் அந்த அமைச்சகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள பிரதமர் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் நாயர், இது குறித்து எழுதிய குறிப்புகள் மூலம் இது வெளியாகி உள்ளது. யாருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.
முதலில் வந்தவர்களுக்கே முதலில் என்ற கொள்கை ஏன் பின்பற்றப்பட்டது. ஏன் உரிமங்கள் ஏலத்தில் விடப்படவில்லை என்பது பற்றி எனக்கு தெரியாது. இது குறித்து ராசா என்னிடம் ஆலோசிக்கவே இல்லை. இது குறித்து அமைச்சரவையிலும் விவாதிக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் பிரதமர் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு எல்லாமே தெரியும் என்பதும் இந்த விஷயத்தில் அவர் தலையிட விரும்பாமல் அமைதி காத்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் விசாரணையின் போது நாயர் சமர்ப்பித்த குறிப்புகளில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதியும், 10 ம் தேதியும் 2 ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பான இரு கடிதங்களை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.
11 ம் தேதி நாயர் இது தொடர்பான மேல் விவரங்கள் கேட்டு தொலைத் தொடர்பு துறைக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக நாயர் எழுதிய குறிப்பில், தொலைத் தொடர்பு அமைச்சகத்துடன் பிரதமர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. பிரதமர் அலுவலகத்தையும் இந்த விஷயத்தில் எட்டவே வைக்க விரும்புகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரதமர் ஏன் தொடர்பு வைத்து கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்து வரும் முறைகேடுகள் அறிந்திருந்தும் கூட பிரதமர் கண்ணை மூடிக் கொண்டாரா? அல்லது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

No comments:
Post a Comment