கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.
தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால், காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
கண் மையை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரித்து உபயோகிக்கலாம். முதலில் பஞ்சில் திரி செய்து அதை கரிசலாங்கண்ணிச் சாற்றில் அரை மணி நேரம் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதே மாதிரி நான்கைந்து நாட்களுக்குச் செய்ய வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு, அதில் காய்ந்த திரிகளைப் போட்டு, எரிய விட வேண்டும். அதை ஒரு கொட்டாங்குச்சி அல்லது சட்டியால் பாதியாக மூட வேண்டும். அந்தக் கொட்டாங்குச்சி அல்லது சட்டியினுள் சந்தனம் தடவப்பட்டிருக்க வேண்டும். திரி எரிந்து மூடியுள்ள சட்டியில் கருப்பான பவுடர் மாதிரிப் படியும். அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.
வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவ்தோடு, கருவளையங்களையும் போக்கும்.
சூடு படுத்தி, வடிகட்டி, ஆற வைத்த தண்ணீரை இங்க் பில்லரில் நிரப்பி, கண்களில் ஒரு பக்கமாக கவிழ்த்தால் கண்கள் சுத்தமாகும்.
1 comment:
நல்ல அறிவுரைகள் மற்றும் குறிப்புகள்...
கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்...
Post a Comment