Pages

Search This Blog

Monday, August 01, 2011

குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்

பாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்
 எவரும் அறியாமல் மாறு
 வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.


அவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது?ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும்  என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.
போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?

அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது
தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.

போரே முடிவானது

போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும், ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக்  கொண்டார்கள்.
போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.
ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும்  ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.

அச்சமயம்  ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.
ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.

பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா? ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம்  எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
 ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு  ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.

எங்கு இறைவன் இருக்கிறானோ
அங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்


பெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான  பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா ,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும்  திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.

சஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.

போர்முனை

அநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.

இருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் ? கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் 

சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா!இதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள  சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில்  அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.

தொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே “பெளண்டிரம்”" அனந்த விசயம்”"சுகோஷம்”"மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.
எதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள், அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.

“ஹே கிருஷ்ணா!என் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா!”

கண்ணன்: அர்ச்சுனா!இதைத்தவிர வேறெதெல்லாம் தெரிகிறது?

 அர்ச்சுனன் கேசவா! தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன்? எனக்கு எதுவும் கிட்டாது. (31)

கண்ணன்: அர்ச்சுனா! இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்?

 அர்ச்சுனன் :கிருஷ்ணா! எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா! எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது.        
                                                       (32)
கண்ணன்:  வில்லாளி வீரனே! அர்ச்சுனா! நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா?

அர்ச்சுனன்: கண்ணா! நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே?    (33)

கண்ணன்:  அர்ச்சுனா! இவர்கள் எல்லோரும் உனக்கு யார்?

அர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)
கண்ணன்:  தம்பி ! இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்?
அர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா! எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன்.          

                        (35)
கண்ணன்:  தம்பி ! ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா?.

அர்ச்சுனன்: ஜனாத்தனா! பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானே?இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவா!இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா?      ( 36,37)

கண்ணன்: அர்ச்சுனா! எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்?

அர்ச்சுனன்: பெருமானே! பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்?    ( 38, 39)

கண்ணன்:  குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.
அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்?

கண்ணன்:  குலம் முழுவதிலும் அதர்மம் பரவும்.  (40)
அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?

கண்ணன்:  அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்
அர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.                                        (41)
அர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?

கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன. ( 42,43)
அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.                                     (44)
போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?
அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது.  (45)
கண்ணன்:  இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?
அர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது.                      (46)
இப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான்.       (47)
படையினரின் விபரம்
பாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.

துரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா, விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்

No comments:

Post a Comment