Pages

Search This Blog

Monday, August 01, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!! - வாழ்க்கை கவிதை



(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

என்னக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!




Click Here!
up
13
dowm
email

எழுதியவர் :இன்பா

நாள் :07-05-2011 06:19:40 AM
Added by :Inbhaa..
பார்வை :2837
உங்கள் கவிதை சமர்ப்பிக்க


நண்பர்களும் பார்க்க

share with orkut Share379

Get Code



(ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும் )
உங்கள் கருத்து

புதிய கருத்துக்கள்
அம்மாவின் அருமை, இருக்கும் போது தெரியாது. அவர்களை இழக்கும் போது தான் தெரியும்.

பதில் அளி
0 வாக்கு
  
நல்ல கவிதை நண்பா , அன்பென்றால் அம்மா ,அம்மா என்றால் அன்பு வாழ்த்துக்கள் நண்பரே ''

பதில் அளி
1 வாக்கு
  
வாவ் சூப்பர் YA

பதில் அளி
0 வாக்கு
  
அம்மா-மகனின் ஆழமற்ற அன்பு. சூப்பர் கவிதை.வாழ்த்துக்கள் .

பதில் அளி
0 வாக்கு
  
ரொம்ப சூப்பர் உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்

பதில் அளி
0 வாக்கு
  
இந்த கவிதை யை என்ன வார்த்தை கொண்டு பாராட்ட என தெரியவில்லை... நட்புடன் ஜி.உதய்

பதில் அளி
1 வாக்கு
  
மச்சி சூப்பர் டா கலக்கிட்ட.....

பதில் அளி
2 வாக்கு
  
நண்பா நின் நினைவுகள் நின் பாசம் வாழ்க, கண்களில் கண்ணீர் மட்டும் மிச்சம் வாழ்க தமிழ் வாழ்க நின் thaai paasam

பதில் அளி
2 வாக்கு
  
டேய் மதன், நீ என் நண்பன்னு சொல்றதுக்கு பெருமையா இருக்கு

பதில் அளி
1 வாக்கு
  
உயிரோட்டமான படைப்பு....வாழ்த்துக்கள் நண்பா...

பதில் அளி
2 வாக்கு
  
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

பதில் அளி
1 வாக்கு
  
பாராட்டுகிறேன் நண்பா..... வார்த்தைகளால் அல்ல... கண்ணீரினால்....

பதில் அளி
3 வாக்கு
  
மனதை நெகிழ வைத்து விட்டது தோழரே ..

பதில் அளி
3 வாக்கு
  
மனிதனை படைத்தது கடவுள் என்றால் அனைவருக்கும் கடவுள் அம்மாதான்...!

பதில் அளி
2 வாக்கு
  
கண்ணீர் மல்க வைத்தக் கவிதை.. உணர்வுப்பூர்வமான கவிதை.. பாராட்டுக்கள்..

பதில் அளி
1 வாக்கு
  
நண்பரே..., தாயின் அன்பு கிடைக்காத பிள்ளை இந்த பூமியில் இல்லை. நிச்சயம் அது உங்களுக்கும் கிடைக்கும் . உங்கள் தாயின் பாச மழையில் நனையும் நாள் வெகுதூரத்தில் இல்லை., ஏங்கிய பின் கிடைத்தால்தான் எதையுமே முழுவதுமாய் ரசிக்கமுடியும்...

பதில் அளி
4 வாக்கு
  
ஆம் தோளா...உண்மை தான்....

பதில் அளி
3 வாக்கு
  
நன்றி தோழர்..., தோழியரே..., உங்கள் வாழ்த்துகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....அன்புடன் இன்பா.,

பதில் அளி
1 வாக்கு
  
அருமை அருமை ...... அம்மாவை விட்டு விலகி இருந்தால் தான் அதன் பாசம் அதிகரிக்கும் என்பதன் எடுத்துக்காட்டு !!!!!!!!!!!!

பதில் அளி
1 வாக்கு
  
மிகவும் அருமையான கவிதை

பதில் அளி
2 வாக்கு
  
கவிதை அற்புதம்... வாழ்த்துகள் தோழா!

பதில் அளி
2 வாக்கு
  
நெஞ்சை தொட்டது உங்கள் எழுத்து இந்த கவிதைக்கு மார்க்கு பத்துக்கு பத்து

பதில் அளி
3 வாக்கு
  
இந்த கவிதையில் என் அம்மாவை பார்கிறேன் நிதமும் தேடுகிறேன் உன்னை அம்மா வெகு தொலைவில் நான் இருந்தாலும் என் மனது மட்டும் உன் முந்தானைக்குள்

பதில் அளி
5 வாக்கு
  
மிகவும் அருமையான கவிதை நண்பரே பல நாட்களுக்கு பிறகு ஏன் உணர்வுகளை தட்டி எழுப்பிய கவிதைக்கு மிக நன்றி!!

பதில் அளி
2 வாக்கு
  
உணர்வு மிக்க கவிதை. பாராட்டுகள் கவிஞரே. அன்புடன். கா.ந.கல்யாணசுந்தரம்.

பதில் அளி
1 வாக்கு
  
This is rajesh kumar of eluthu team and I would like to say "its fantastic man."

பதில் அளி
2 வாக்கு
  
சூப்பர்

பதில் அளி
0 வாக்கு
  
Superb inbhaa.congrates.

பதில் அளி
4 வாக்கு
  
மிக சிறந்த கவிதை

பதில் அளி
2 வாக்கு
  
அழகிய கருத்து இதமான படைப்பு வாழ்த்துக்கள் செல்லம்மா

பதில் அளி
2 வாக்கு
  
உணர்வுப்பூர்வமான படைப்பு..... வாழ்த்துக்கள் நண்பரே .....

பதில் அளி
2 வாக்கு
  
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

பதில் அளி
3 வாக்கு
  
அம்மா என்கின்ற தெய்வத்தைப் பற்றி என்ன எழுதுவது என்று முழிப்போருக்கு இக்கவிதை ஒரு ஆறுதல் இக்கவிதையைப் பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..... மிக்க நன்றி நண்பா (இன்பா)..... வாழ்த்துக்களுடன் நந்தினி.....

பதில் அளி
6 வாக்கு
  
தேக்கி வைத்த கண்ணீரை....தட்டியெழுப்பிவிட்டது....

பதில் அளி
8 வாக்கு
  
மிகவும் நன்று நண்பா!வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

பதில் அளி
1 வாக்கு
  
எந்தன் வரிகள் என்று நினைத்தேன் இப்போது தான் தெரிகிறது . அம்மாவை பிரிந்த ஒவ்வொரு பிள்ளையின் வலிகள் என்று நன்றி இன்பா

பதில் அளி
4 வாக்கு
  
இது கவிதை போல் இல்லை இது கவிதையின் தாய் போல் உள்ளது ........

பதில் அளி
4 வாக்கு
  
நண்பா உங்கள் கவிதையால் என் கண்கள் பனிக்கிறது வாழ்த்துக்கள்

பதில் அளி
2 வாக்கு
  
அனைத்து தெய்வங்களுக்கும் ..,பிள்ளை இருக்கிறதா என தெரியவில்லை...ஆனால் அனைத்து பிள்ளைகளுக்கும் தெய்வம் உள்ளது அவள் தான் அன்னை...,கண்களை கலங்க வைத்த கவிதை ...வாழ்த்துக்கள்

பதில் அளி
11 வாக்கு
  
உண்மையில் அனுபவித்து எழுதி இருகிறீர் நண்பரே நன்றி உங்கள் வரிகள் கண் கலங்க வைத்து விட்டன அன்புடன் மீனா

பதில் அளி
3 வாக்கு
  
மிக சிறந்த படைப்பு இன்பா...!!!

பதில் அளி
3 வாக்கு
  
1 வாக்கு
  
உண்மையான வரிகள் !

பதில் அளி
3 வாக்கு
  
நன்றி தோழர்களே ...

பதில் அளி
2 வாக்கு
  
பரிசு பெற்ற இன்பா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உன்புடன் ஹரி

பதில் அளி
3 வாக்கு
  
நன்றி நண்பா...

பதில் அளி
5 வாக்கு
  
ரொம்ப நல்ல இருக்கு, keep it up

பதில் அளி
6 வாக்கு
  
நண்பரே தாயின் உண்மையான பாசம் அறியாத பேதை நான் .....தாயிருந்தும் நான் அநாதை ....உங்கள் தாய் போல் எனக்கும் ஓர் தாய் மறு ஜென்மத்தில் ஆவது வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அந்த ஜென்மத்தில் ஆவது நன் தாய்க்காக கவி எழுதிட வேண்டும் என் வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி........ v .m .j .கௌசி.........

பதில் அளி
1 வாக்கு
  
என் இனிய நண்பர் .....இன்பாவிட்க்கு உங்கள் கவிபணி என்றும் தொடர வாழ்த்துக்கள்....................... ப்ரியமுடன், மனோஜ் கிரீஸ்

பதில் அளி
0 வாக்கு
  
அன்புள்ள நண்பர் கௌசிக்...... உங்கள் தாய் உங்கள் மீது அன்பு செலுத்தும் நாள் வேகுதுரம் இல்லை நண்பரே,கவலை வேண்டாம். ப்ரியமுடன், மனோஜ் கிரீஸ்

பதில் அளி
-1 வாக்கு
  
இன்பா உம்மை பார்க்கும் போது எனக்கு புராமையாக இருக்குபா நானும் உம்மை போல் மத்திய கிழக்கில் என் தாயை விட்டு பிரிந்து வாழ்பவன் நம் எல்லோர்க்கும் தாயின் பாசம் நிலைக்கட்டும் ......!

பதில் அளி
0 வாக்கு
  



நண்பர்களின் கருத்துக்கள்
easwar
2011-05-07
1) சூப்பர் கண்முன்னால அப்புடியே நிக்குது காட்சிகள்..
vimal
2011-05-07
2) அருமை தோழர் .மறுக்க முடியாத உண்மை வரிகளுக்கு நன்றி .
MEMANGALAM,
2011-05-08
3) என் போன்று அயல் நாட்டில் வாழும் ஒரு உண்மையான மனதின் தனிமை நேரத்தின் நிஜமான அற்புத வரிகள் .......வாழ்த்துக்கள் .....கண்ணில் நீர் அருவியாகிறது......... நண்பா....
MEMANGALAM,
2011-05-08
4) உண்மை ........வரிகள் ......வாழ்த்துக்கள்
A.Rajthilak
2011-05-09
5) vஉதிரம் என்னும் பசை தடவி எலும்பு என்னும் கற்கள் அடுக்கி உன் அன்பின் சின்னமாய் இருப்பேன் அம்மா என்றும் உந்தன் காலடியில்...!!!
siddhu
2011-05-10
6) உங்கள் கவிதைக்கான பதிலை என்னால் அழுகையால் மட்டுமே தர முடியும் நண்பரே ...
inbhaa
2011-05-10
7) நன்றி நண்பர்களே...,உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,,,,,.
SILAMBARASANRAJENDRAN
2011-05-11
8) அம்மா என்னும் பூலோக நரகத்தின் சொர்க்கத்திற்கு நிகர் வேறேது அருமை நண்பா. உங்கள் வரிகள் பிரிவின் வெளிப்பாடு .
tamil
2011-05-11
9) இந்த கவிதையை(கண்ணீரை) என் தாய்க்கு நான் சமர்பிக்கிறேன். உங்களது உத்தரவு கிடைத்தால் .
Sathya
2011-05-11
10) கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது உங்கள் கவிதை...,
devirajkamal
2011-05-11
11) உங்கள் கவிதையை நான் வெறும் எழுத்துக்களாக பார்க்கவில்லை நண்பா..உயிரின் வலியாகவே உணர்கிறேன்..தாய் என்பவள் நம்முள் இரத்தமுமாய் சதையுமாய் இருக்கிறாள்..இதனை உணர மறுக்கின்ற இதையங்களும் இருக்க தான் செய்கின்றன எனும் பொழுது வேதனையாக இருக்கிறது..இருப்பினும் உங்களை போல் சிலர் இருப்பதை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..நன்றி நண்பா..
jaisee
2011-05-11
12) சிறந்த படைப்பு இன்பா ,வாழ்த்துகள்...!!!
deeps
2011-05-12
13) really super
aayiraththil
2011-05-12
14) அருமையானகவிதை நண்பரே... என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும் என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே அம்மா..!! நெஞ்சை நெகிழ செய்த வரிகள்...
meena
2011-05-13
15) உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது நண்பா ,உங்களின் படைப்புகள் வளர என் வாழ்த்துக்கள்
meena
2011-05-13
16)
meena
2011-05-13
17) சூப்பர் நண்பா
G.Udhay
2011-05-14
18) உண்மையில் எனக்கு உரைத்த வரிகள்... அருமை நண்பா
Lokez
2011-05-16
19) அம்மா நீ என் மூச்சு .
rathansai91
2011-05-27
20) கண்கள் மறைத்தாலும் இதயம் அழுகின்றது ..........
கார்த்திக்
2011-05-27
21) கண்கள் கலங்குகிறது மிகவும் நன்றாக உள்ளது தோழா
arun
2011-05-27
22) அம்மா தான் என் உயர்
arun
2011-05-27
23) அம்மா நீ என் மூச்சு
Balamudhan
2011-05-27
24) வாழ்த்துக்கள் மச்சி பரிசு பெற்றமைக்கு......
thaagu
2011-05-28
25) kanneer varugirathu karuththukal varavillai... ~~thaagu
Anjali
2011-05-28
26) விடுதியில் இருக்கும் என் போன்ற மாணவர்களுக்கு கண்களில் கண்ணீரை உண்டாக்கும் வரிகள்,,,,,,,,,,,,,, நாம் இறந்தாலும் இறக்காதது தாயின் பாசம்...........
manimegalai
2011-05-28
27) thayin paasathai purinthu eluthuiya nanbanukku naan thalai vanangukiren mani delhi
easwar
2011-05-28
28) parisu petramaikku manamaarntha vaazhthukkal.....
easwar
2011-05-28
29) பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.....
inbhaa
2011-05-28
30) நன்றி தோழர், தோழியரே...உங்கள் வாழ்த்துகளுக்கு எனது அன்பான வணக்கங்கள்
thu.pa.saravanan
2011-05-28
31) கண்கலங்குது இதயம்கனக்குது நண்பா இன்பா
Nishan
2011-05-29
32) வாழ்த்துக்கள் நண்பனே

No comments:

Post a Comment