Pages

Search This Blog

Monday, August 01, 2011

கர்ம யோகம்

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானபுத்தி எனும் மெய்யறிவுதான் தலைசிறந்தது என்றால் நான் உத்தமமான ஞான்புத்தியை நாடாமால் கொடுமையான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஏன் என்னை வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் இரண்டையும் சொல்லுகிறீர்கள்! ஒருமுரை செயலில் ஈடுபடு! என்கிறீர்கள். மறுமுறை மெய்யறிவை நாடு என்கிறீர்கள்.கேசவா!உங்களுடைய இந்த மாறுபட்ட அறிவுரையால் எனக்குத் தடுமாற்றம் குழப்பம் ஏற்படுகிறது. தீர்மானமாக ஒருவழியை எனக்குக் காட்டுங்கள். அதன் மூலம் நான் ந்லன் பெறவகை செய்யுங்கள். கண்ணன்:தீமையை விரும்பாத இயல்பு உள்ள அர்ச்சுனா!இந்த மனித உலகில் இருவகையான் ஈடுபாட்டை முன்னே கூறியிருக்கிரேன். சாணக்கிய யோகிகளுக்கு ஞான யோகத்திலும் சாமனிய யோகிகளுக்கும் கர்ம யோகத்திலும் ஈடுபாடு இன்றியமையாதது. இரண்டின் இலட்சியமும் ஒன்று தான்.ஞான யோகத்தாலும் கர்ம யோகத்தாலும் ஒரே நிலையிலுள்ள சம புத்திஎ எற்படுகிறது.இரு யோகங்களின்வழிமுறைகளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இலட்சியத்தின் முனைப்பு இருக்க வேண்டும்.
அர்ச்சுனன்: அந்த சமபுத்தி நிலையை எட்ட எவ்வகைக் கருமத்தை புரிவது அவசியமாகிறது?
கண்ணன்:செயல் புரிவதுதான் அவசியம். மனிதன் செயலாற்றல் உள்ளவன். செயல் புரியாதிருந்தால் அவனது ஆற்றல் வீணாகி விடும்.செயல் புரியாமல் பயனை எட்டவே முடியாது.சாதனை மூலம் தான் சித்தி கிட்டும்.சமபுத்தியை பெற செயல் புரியத் தொடங்க வேண்டும்.செயலைப் புறக்கணிக்கவே கூடாது.
அர்ச்சுனன்: செயல் புரிவதைப் புறக்கணிப்பதால் சமபுத்தி கிட்டாதா?
கண்ணன்: இல்லை.எந்த மனிதனும் எந்த நிலையிலும் ஒரு கணநேரம் கூட செயற்பட்டால்  இருக்க முடியாது.எனெனில் இயற்கையாக ஏற்பட்டுள்ள இயல்புகள் உரிரனங்களை இயக்குகின்றன. செயல் புரிவது பிராணிகளின் உடன் பிறந்த சுபாவம்.இதை எந்தப் பிராணியாலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது.
அர்ச்சுனன்: சரி மனிதன் எதுவும் செய்யாமல் மெளனியாக அமர்ந்திருந்தால் அது செயலைத் துறந்ததாக அமையாதா?
கண்ணன்: அது செயல் துறவு ஆகாது.புலன்களைப் வெளிப்படையாக செயல்பட விடாமல் உள்ளத்தில் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருப்பதும் செயத்துறவு ஆகாது.இது மூடர்கள் புரியும் வெளிவேசம், ஏமாற்று வேலை.இதன்னல் பல தீமைகள் ஏற்படும்.
அர்ச்சுனன்: அப்படியால் நீங்கள் கூறிய சமபுத்தியை எப்படிப் பெற முடியும் கண்ணா?
கண்ணன்: அர்ச்சுனா! எந்த மனிதன் புலன்களைத் தன் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு ஆசாபாங்களுக்கு அடிமையாகாமல் கடமையாகிய பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்து வ்ருகிறானோ.அவன் தான் உத்தமன். அவனுக்கு சமபுத்தி கிட்டுகிறது.ஆகையால் நீ சாத்திர விதிப்படி அமையும் கடமையச் செய். மனம் போனவாறு செயல்புரிவதைவிட விதித்துள்ள கடமையை புரிவது உயர்ந்தது.செயல் புரியாவிட்டால் உன் உடல் இயக்கம் கெட்டுவிடும்.
அர்ச்சுனன்: பகவானே! கடமைளை செய்வதால் பந்தம் ஏற்படாதா?
கண்ணன்: ஏற்படாது செயலை ” யக்ஜம்” என்பர் இதைச் தனக்காகச் செய்தால் மனிதன் செயல்களின் தடையால் கட்டப்படுகிறான். இதைத்தான் “கர்மபந்தம்”என்பர்.குந்தியின் மைந்தனே! நீ கடமைச் செயலை எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமல் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நெறி உணர்வுடன் செய்து வா.
அர்ச்சுனன்: நான் ஏன் செயல் புரிய வேண்டும் கண்ணா?
கண்ணன்: தம்பி அர்ச்சுனா மனித இனத்தை படைக்க ஆரம்பித்த போதே பிரம்மதேவர் இந்த நியதியை ஏற்படுத்தி விட்டார்.படைப்புக் காலத்திலேயே பிரம்மா மனிதர்களிடம் ” கடமைச் செயலேனும்”யக்ஜத்தை செய்து வளர்ச்சி பெறுங்கள்.இது கடமையை நிறைவேற்ற ஊக்கமளிப்பதாக, உதவி புரிவதாக அமையட்டும்!” என்று கூறியிருக்கிறார்.
அர்ச்சுனன்: பிதாமகரான ( பாட்டானார்) பிரும்மதேவரே! எந்த மனநிலையில் நாங்கள்கடமையைச் செய்ய வேண்டும்?
கண்ணன்: “யக்ஞம்” எனும் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாக நீங்கள் தேவர்களின் உயர் நிலையை எட்டுங்கள்.தேவதைகளுக்கு வளர்ச்சி ஏற்படும்.தேவதைகள் உங்களை வளர்த்து உயர்வு அளிப்பார்கள்.இவ்வாறு தேவதைகளும் நீங்களும் ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்வதால் அதாவது தமக்காக அல்லாமல் பிறருக்காக கடமையைச் செய்வதால் நீங்கள் பரமாத்மாவை அடைவீர்கள்.பெரும்பேறு பெறுவீர்கள்.
அர்ச்சுனன்: பிதாமகரே! நாங்கள் கடமையைச் செய்யாது போனால்?
கண்ணன்: நீங்கள் கடமையைச் செயல் எனும் யக்ஞத்தைச் செய்வதால் அபிவிருத்தி அடைந்த தேவதைகள் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான் சாதனங்களை அளித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் நீங்கள் அச் சாதனங்கள் மூலமாக தேவதைகளைப் பேணி வளர்க்காமல் நீங்களே சுகபோகங்களை அனுபவிப்பவர்களானால் திருடர்களாவீர்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குற்றத்திலிருந்து எப்படி தப்புவது?
கண்ணன்: தம்பி அர்ச்சுனா! பிறர் நலனிற்காகக் கடமைச் செயலை செய்து வருவதுதான் வழி.இதனால் யக்ஞபலனாக சமத்துவ நிலையை உணர்வாய்.இதனால் மேன்மை பெறும் மனிதர்கள் பாவங்களிலிருந்து முக்தி பெறுகிறார்கள்.எவர் தம் சுய செளக்கியங்களுக்காகவே செயலாற்றுகிறாரோ அவர்கள் பாவங்களையே சேகரிக்கிறார்கள்.பாவிகளாக கருதப்படுகிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே!இப்போது நீங்கள் கடமைச் செயல்பற்றி பிரமதேவரின் கட்டளையை எடுத்துச் சொன்னீர்கள்.இது குறித்து உங்கள் அறிவுரை என்ன?
கண்ணன்: இது குறித்து நான் கூறுவது சிருஷ்டிஎனும் சக்கரத்தை இயக்க கடமைச் செயலை செய்து வருவது அவசியமாகிறது.ஏனென்றால் எல்லா பிராணிகளுமே உணவாகிய அன்னத்திலிருந்து உற்பத்தியாகிறது அன்னம் மழையினால் உற்பத்தியாகின்றன.மழை யக்ஞத்தால்(கடமையை நிடைவேற்றுகிறது)பொழிகிறது.யக்ஞம்சுயநல உணர்வு இல்லாமல் செய்யும் பணிகளால் உருவாகிறது.கடமைப் பணிகளைப்புரியும் விதிமுறைகளை வேதங்கள் போதிக்கின்றன.வேதங்கள் பரம்பொருளான் பரமாத்மாவிடமிருந்து வெளிப்பட்டவை.ஆகையால் எங்கும் பரந்துள்ள பரமாத்மா யக்ஞத்திலும் எப்போதும் இருந்து வருகிறார்.பாராத்மாவை அடைவது தன் கடமைப் பணியை நிரைவேற்றுவதின் மூலமே சாத்தியமாகும். ஆகையால் சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்கு மனிதர்கள் தம் கடமைச் செயல்கள் முரையாக செய்துவர வேண்டியது இன்றியமையாத தேவை.
ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது.

அர்ச்சுனன்: எவராது அந்த சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்காக தன் கடமைப் பணியை செய்யாது போனால்?
கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் சிருஷ்டி சக்கரத்தின் பரம்பரையை இயக்கத் தொடரைப் பாதுகாக்கத் தன் கடமைப் பணியை செய்யாது இருகிறானோ அவன் புலன்களுக்கு அடிமைப்பட்டு போக வாழ்வில் உழலும் பாவத்தை புரிகிறான்.பாவம் நிறந்து வாழ்பவனின் வாழ்க்கை வீண்.பூமிக்குப் பாரம்,இவன் வாழ்வதைவிட இறப்பதே மேல்.
அர்ச்சுனன்: சுயநலப்பற்றில்லாமல் நீங்கள் காட்டும் நெறிவழியில் சிருஷ்டி சக்கரத்தில் இயக்கத் தொடரைப் பேணிப் பாதுகாக்க தனது கடமைப் பணியை மனிதன் நிறைவேற்றி வந்தால் ஆவது என்ன?
கண்ணன்: அத்தகைய உத்தம மனிதன் தனக்குள் அகம் மகிழ்ந்தும் மனநிறைவு பெற்றும் வாழ்கிறான்.அவன் செய்யா வேண்டியது ஏதும் மிஞ்சி இருப்பதில்லை.ஏனெனில் அந்த மகா புருஷனுக்கு இந்த உலகியல் வாழ்வில் செயல்புரிவதோ புரியாமலிருப்பதோ சுயலாபம் கொண்டதல்ல.அந்த உத்தமருக்கு எந்தப் பிராணியுடன் சுயநலம் சார்ந்த சம்பந்தம் ஏற்படுவதில்லை.
அர்ச்சுனன்: பகவானே!நானும் அத்தகைய உத்தம புருஷனாக முடியுமா?
கண்ணன்: முடியும்.நீ உத்தம புருஷனாக ஆகலாம்.நீ தொடர்ந்து பற்றுதல் இல்லாமல் கடமையைச் செய்து வா.அப்போதுதான் பாரம்மத்மாவை எட்ட முடியும்.
அர்ச்சுனன்: முன்பு இப்படி பற்றுதல் இல்லாமல் கடமைகளை எவராது செய்திருக்கிறாரா? அவர் பரமாத்மாவை அடைந்திதிருக்கிறாரா?
கண்ணன்: ஜனக மாகராஜா போன்ற பல மகா புருஷர்கள் தன்னலம் கருதாமல் கடமைப் பணிகளை செய்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.பரமாத்மாவின் அனுக்கிரகத்தைப் பெற்ற பின்னும் அவர்கள் உலகநலனுக்காக ( உலகைத் தீய வழியிலிருந்து தடுத்து நல்வழியில் செலுத்த) கடமையாற்றி வந்திருகிறார்கள்.ஆகையால் லோகஸங்கிரகம்”நலனிற்காக நீயும் அவர்களைப்போல கடமைகளைச் செய்.
அர்ச்சுனன்: லோகஸங்கிரகம் எனும் உலகநலன் எப்படி ஏற்படுகிறது?
கண்ணன்: இருவகையில் ஏற்படுகிறது தமது கடமைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவும், வாக்குறிதிகள் மூலமாகவும், மேன்மக்கள் புரியும் செயல்களைப் பார்த்து பிறர் பின்பற்றுகிறார்கள்.மேலும் அவைகள் தம் வாக்குகளால் புலம்படுத்தும் நெறிமுறைகளை மற்றவர்கள் ஏற்றுச் செயலாற்றுகிறார்கள்.
அர்ச்சுனன்: பரமாத்மாவை அடையும் தகுதிபெற்ற ஜனக மகாராஜா போன்றவர்களைப் போல் உலக நலனிற்காக கடமையாற்றியதற்கு எடுத்துக் காட்டுகள் உள்ளதா?
கண்ணன்: என்னையே எடுத்துக்காட்டகக் கொள் பார்த்தா!மூவுலகிலும் நான் செய்ய வேண்டிய கடமை மீதியில்லை.எனக்கு கிடைக்க வேண்டிய பொருள் எதுவும் கிடைக்காமல் போகவில்லை .எல்லாம் நிறைவுடன் பெற்றிருந்தும் நான் உலக நலனிற்காக கடமைப் பணிகளைப் புரிந்து வருகிறேன்.
அர்ச்சுனன்: பகவானே நீங்களும் கடமைப்பணி புரிய வேண்டிய அவசியம் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! அவசியமுள்ளது நான் சுணங்கி கடமைப் பணிகளை ஒதுக்கி விட்டு கடமையை நிறைவேற்றாது போனால் பிறரும் என்னைப் பின்பற்றி சுணங்கி சோம்பி நிற்பார்கள்.அவர்களும் கடமைப் பணிகளை புறக்கணித்து விடுவார்கள்.அவர்களது வாழ்க்கை இயக்கம் சீர்குலையும்.
அர்ச்சுனன்: அப்படியானால் என்ன ஆகும்?
கண்ணன்: நான் என் கடமைகளைச் செய்யாது இருந்தால் மற்ரவர்கள் முறை தவறி வாழத் தொடங்குவார்கள்.இதனால் எல்லாக் குளறுபடிகளுக்கும் மக்கள் சமுதாயத்தை சீர்குலைத்தற்கும் நானே மூலகாரணமாவேன்.
அர்ச்சுனன்: இந்த நோக்கில் உலக நலனிற்காக கடமைப் பணி புரிவது மிக அவசியமாகிறது.ஆனால் தத்துவஞானிகளான மகா புருஷர்களுக்கும் கடமைப் பணிகள் புரிவது அவசியமாகிறது?
கண்ணன்: ஆம் அர்ச்சுனா! மிகவும் அவசியம். எப்பட்ய் அஞ்ஞானிகள் தாம் செய்யும் தொழில்களீல் சுயநல விளைவுடன் பயனை எதிர்நோக்கி முனைப்புடன் ஈடுபாடுகிறார்களோ விருப்பு வெறுப்பில்லாத ஞானிகளான மாகபுருஷர்களும் உலநலனுக்காக வேண்டி முனைப்புடன் தம் கடமைப் பணிகளில் ஈடுபட்டாக வேண்டும். மேலும் ஞானிகளிற்கு மகத்தான பொறுப்பும் உள்ளது.அஞ்ஞானிகளை தம் வழியில் கொண்டுவரும் வகையில் எடுத்துகாட்டாக அவர்கள் பணிபுரிய வேண்டும்.அதன்னல் அஞ்ஞானிகள் திருந்த வேண்டும்.
அர்ச்சுனன்: அஞ்ஞானி, ஞானி இருவரும் செயற்படுவதில் என்ன வித்தியாசம் என்ன?
கண்ணன்: எல்லாச் செயல்களும் பலவகையிலும் இயற்கையின் இயல்புகளால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.ஆனால் நான் எனது எனும் செருக்கில் மயக்கிய உள்ளப்பாங்கு மனிதனை அஞ்ஞானியாக்குகிறது.அவன் நான் தான் செய்கிறேன்.என்று கருதுகிறேன்.வீரம் மிக்கவனே! குணப்பிரிவு,கர்மப்பிரிவு இரண்டையும் உணர்ந்துள்ள் ஞானி எல்லாச் செயல்களும் இயல்பாகவே இயற்கையிலேயே நிகழ்கின்றன.என்பதை உண்ர்ந்திருப்பதால் தாம் புரியும் செயல்களில் சுயநலப்பற்று வைப்பதில்லை.
(சத்துவம் ரஜஸ் எனும் குணங்களும் ,உடல் புலன்கள்,மனம்,புத்திபிராணி,பொருள் எல்லாம்கொண்ட உலகியலும் குணப்பிரிவிலும் இவைகளில் ஏற்படும் செயல்கள் கருமப்பிரிவிலும் அடங்கும்)
அர்ச்சுனன்: கண்ணபிரானே!உங்களுக்கு உள்ள பொறுப்புகள்  ஞானிகளான மாகா புருஷ்ர்களுக்கும் உள்ளனவா?
கண்ணன்: இல்லை அர்ச்சனா!ஞானிகளை மகா புருஷர்கள் அஞ்ஞானிகளைப்போல்  காரியங்களைச் செய்யாமல் இருக்கலாம்.ஆனல் அவர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவே அஞ்ஞானிகளை தடுமாறச்செய்யாமல் இருக்க வேண்டும் .சிறிதளவு இயற்கைக் குணங்களில் மோகித்து மயங்கினாலும் வழி தவறி விடலாம்.இயற்கைக்குணங்களிலும் செயல்களிலும் பற்றுதலுடன் ஈடுபட்டுள்ள அஞ்ஞானிகள் ஞானிகளைப் பார்த்து மேலும் சஞ்சலப்பட்டு வழிமாறிப் போவார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! நான் இப்போ சஞ்சலப்படுகிறேனே.என்னால் என்ன செய்ய முடியும்?
கண்ணன்: அர்ச்சுனா! நீ பகுத்தறீயும் விவேக புத்தியுடன் சிந்தித்து உன் எல்லாச் செயல்களையும் என்னிடம் அர்ப்பணித்துவிடு விருப்பு , வெறுப்பு பற்றுதல், மமதை,வருத்தம் ஏதும் கொள்ளாமல் கடமைப் பணியான போரிடும் பணியை தொடர்ந்து செய். உன் வீர இயல்பிற்கேற்ப போர்புரி.
அர்ச்சுனன்: எனது எல்லாக் கடமைப் பணிகளையும் உங்களிற்கே அர்ப்பணிப்பதால் என்ன ஆகும்?
கண்ணன்: குற்றமற்ற நோக்கத்துடன் சிரத்தையுடன் எனது வழிகாட்டலின்படி நடப்பவர்கள் எல்லாவகைக் கர்ம பந்தங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.தடை நீங்கிய நிலை அவர்களை மேம்படுத்துகிறது.
அர்ச்சுனன்: அப்படியனால் உங்கள் வழிகாட்டலிற்கேற்ப நடப்பவர்களுக்கு என்ன ஆகிறது?
கண்ணன்: என் கொள்கையில் குற்றம் குறை கண்டு அதன் வழியில் செல்லாதவர்கள் உலகியல் உணர்வுகளுக்குள் சிக்கி மதிமயங்கிப் போகிறார்கள்.அவர்களுக்கு பரபொருள் பேரறிவு கிட்டுவதில்லை.அவிவேகி ( அறிவிலி) களாகி அழிந்து போகிறார்கள்.அவர்கள் வாழ்ந்தும் பயனில்லை.
அர்ச்சுனன்: பரமாத்மாவே உங்கள் கருத்துப்படிஆசாபாசம் இல்லாமல் கடமையாற்றத்தவறுபவர்கள் ஏன் அழிவு ஏற்படுகிறது?
கண்ணன்: ஞானி வெறுப்பு -விருப்பு இல்லாத ஈடுபாட்டுடன் செயல்புரிகிறார்கள். இதனால் சாஸ்திர நியமங்களிற்கேற்ப செயலாற்ற அவர்களால் இயலவில்லை.முறைகேடான இயல்பால் அவர்கள் அழிகிறார்கள்.
அர்ச்சுனன்: கண்ணா! இந்த அழிவிலிருந்து காப்பாற்றிகொள்ளா என்ன உபாயம்?
கண்ணன்: ஒவ்வொரு புலன்  சார்ந்த இயக்கத்திலும் விருப்பு -வெறுப்பு கலந்திருக்கின்றன. ஆகையால் மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் நடுநிலையோடு செயல் புரியவேண்டும். விருப்பு-வெறுப்பு உணர்சிகளுமே மனிதனின் பகைவர்கள்.
அர்ச்சுனன்: அப்படியானால் மனிதன் என்ன செய்ய வேண்டும் கண்ணா?
கண்ணன்: தன் கடமையை அறநெறியாக மதித்து நிறைவேற்ற வேண்டும்.குணநலன் குறைவாக இருந்தாலும் கடமை அறநெறி தான்.கடமையை நிறைவேற்றும் போது மரணம் ஏற்பட்டாலும், அது நல்லதே.பிறருடைய அறநெறி எவ்வளவுதான் குணநலன்,நிரம்பியதாக இருந்தாலும் அது எற்கத்தக்கதல்ல.அச்சம் ஊட்டுவது.ஆபத்தானது.
அர்ச்சுனன்: தர்மத்தைச் ( கடமையை) செய்வது சிறந்தது என்று அறிந்திருந்தாலும் மனிதன் எதனால் தூண்டப்பட்ட்டு வழி தவறி அதர்மத்தையும் பாவத்தையும் அடிகடி புரிகிறான்?
கண்ணன்: ரஜோ குணத்தால் ஏற்படும் காமம் பாவத்தை செய்விக்கும் துர்க்குணம் , காமத்திலிருந்து குரோதம் விளைகிறது.மாபாவியான காமம் ஒருபோதும் திருப்தியடையாது.அது பாவங்களை விளைவிப்பது.
அர்ச்சுனன்: மாபாவியான காமம் என்ன செய்கிறது?
கண்ணன்: எப்படிப் புகை தீயை மறைந்திருகிறதோ, தூசு எப்படி கண்ணாடியை மறைந்திருக்கிறதோ, ஜவ்வுப்படிவம் எப்படி கருப்பபையை மூடியிருக்கிறதோ , அதே போல காமம் , பாவம் செய்ய விரும்பாத மனப்பண்பை பலவீனப்படுத்துகிறது.மனிதனை பாவம் செய்யத் தூண்டுகிறது.குந்தியின் மைந்தனே! காமம் தீயைப் போல் எரிக்க எரிக்கத் தணியாதது. விவேவிகளான சாதனையாளர்களிற்கு அது எதிரி.காமத்தில் வயப்பட்ட மனிதனின் விவேகமும் பகுத்தறிவும் மறைக்கப்பட்டு விடுகிறது.
அர்ச்சுனன்: அத்தகைய காமம் எங்கிருக்கிறது?
கண்ணன்: காமம் புலன்கள், மனம், புத்தி மூன்று நிலைகளிலும் இருக்கிறது.இதன் மூலமாக காமம் உடல் பற்றுதல் மிகுந்த மனிதனின் அறிவை மறைத்து அவனை மயங்க வைக்கிறது.பாவங்கள் புரிய தூண்டுகிறது.
அர்ச்சுனன்: அந்த காமத்தை எப்படி அழிப்பது?
கண்ணன்: பரத வம்சத்தில் பிறந்த சிறந்த வீரனே! நீ முதலில் உன் புலன்களை அடக்கு .பிறகு பகுத்தறிவையும் , விஞ்ஞான் அறிவையும் மறைத்துக் கேடு விளைவிக்கும் மாபாவியான் காமத்தையும் கட்டாயம் அழித்து விடு.
அர்ச்சுனன்:  பகவானே! நீங்கள் உபதேசிக்கும் இந்த உபாயத்தை எப்படிச் செயல்படுத்துவது?
கண்ணன்: குந்தியின் வீரமைந்தனே! உடலைவிட மேம்பட்டவை ஜம்புலன்கள்( மேலானவை, வலுவானவை, வெளிப்பாடுமிக்கவை,பரந்திருப்பவை, சூட்சுமமானவை) இந்திரியங்களான் புலன்களைவிட மேம்பட்டது மனசு. மனதைவிட மேம்பட்டது புத்தியெனும் அறிவு.புத்தியைவிட வலுவானவை காமம் எனும் ஆசை. ஆகையால் எல்லாவற்றிலும் வலிமைமிகுந்த காமத்தைக் கட்டுப்படுத்து.இலகுவில் வெல்லமுடியத இந்த எதிரியை வீழ்த்தி விடு! நீ எல்லாவகையிலும் வெற்றி பெறுவாய்.
(காமம்) அகந்தையில் உள்ளது.இதனால் உலகியல் பொருள்களில் அகந்தையில் கவர்ச்சி உண்டு.அகந்தையில் இரு அம்சங்கள், ஒன்று இயற்கையின் அம்சம்.ஜடப் பகுதி,மற்றது பரமாத்மாவின் சைந்தன்யம் எனும் உணர்ச்சி அம்சம்.இயற்கையின் அம்சம் இயற்கையின் பாலும் பரமாத்மாவின் அம்சம் பரம்பொருள்பாலும் ஓரின உறவு காரணமாகக் காணப்படுபவை.ஆகையால் அகந்தையின் அடித்தளக் காமம் இருக்கிறது.உணர்ச்சி அம்சத்தில் தத்துவ ஞான ஆர்வமும் அன்புடைமையும் உள்ளன.இதுதான் ஜடத்திற்கும் சேதனனுக்கும் அடிப்படை வித்தியாசம்.ஜட நிலையைத் தாண்டி சேதன நிலையை எட்டிய மனிதன் ஜடத்தின் அம்சமான காமத்திற்கு அடிமையாகக் கூடாது.

No comments:

Post a Comment