Pages

Search This Blog

Wednesday, September 14, 2011

60 இலட்ச ரூபாய் தொப்பி


பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கு, சமீபத்தில், லண்டனில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பெண் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், தங்களின் அந்தஸ்தை காட்டும் வகையிலும், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து வந்தனர்.

இதில், இளவரசர் சார்லசின் தம்பி மகளான, இளவரசி பெட்ரைஸ் அணிந்து வந்த தொப்பி தான், படு கலக்கலாக இருந்தது. சுருள், சுருளாக, இளம் சிவப்பு நிற பட்டுத் துணியில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த தொப்பி, "டாய்லெட் சீட்' (டாய்லெட் இருக்கை போல் தோற்றமளிக்கும்!) தொப்பி, என அழைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த, அனைவரின் பார்வையும், இந்த தொப்பி மீது தான் பதிந்திருந்தது.

தான் பயன்படுத்திய தொப்பியை, ஏலம் விட்டு, அதில் இருந்து கிடைக்கும் நிதியை, ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக கொடுப்பது என, பெட்ரைஸ் முடிவு செய்தார். சமீபத்தில், இந்த தொப்பி ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற பலரும், போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இறுதியில், அறுபது லட்ச ரூபாய்க்கு, இளவரசியின் தொப்பி ஏலம் எடுக்கப்பட்டதும், அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இளவரசியின் தொப்பியை ஏலம் எடுத்தவர் என்ன கூறினார் தெரியுமா? "இளவரசி அணிந்திருந்த தொப்பியை, நம்மால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என, ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். தற்போது, அந்த தொப்பி, எனக்கே எனக்கு சொந்தமாகி விட்டதை நினைத்து, மகிழ்ச்சியில் திளைக்கிறேன்...' என்றார்.

எப்படியோ, நல்ல காரியத்துக்காக, இந்த பணம் செலவிடப்படுவதில், அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.


No comments:

Post a Comment