பில்லி சூனியம் என்றால் என்ன?
தீய சக்திகளின் துணையோடும் அமானுஷ்ய சக்திகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டும், சமூகத்திற்கு எதிரான, துன்பம் தரக்கூடிய செயல்களைச் செய்தல் எனலாம்.
பானமாடி என்றால் என்ன?
இயற்கைக்கு மாறான அமானுஷ்ய சக்தியுள்ள சிலரால், சமுதாயத்திலுள்ள மற்றவர்களைத் துன்பப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை.
சூனியக்காரி, மாந்திரீகவாதியிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறாள்?
அதீத சக்திகளை இயற்கையாக அமையப்பெற்று மற்றவர்களைத் துன்பப்படுத்துபவள் சூனியக்காரி.
மந்திரங்களைக் கற்று, தீய எண்ணங்களைக் கொண்டு, வெறுப்பும் கொடூர குணமும் அடுத்தவர்களைத் துன்புறுத்தும் மனமும் கொண்ட ஒரு தனிமனிதன் மாந்திரீகவாதி ஆவான்.
சமுதாயத்தில் பாதிக்கப்படுபவர்கள்
* சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக, ஏழ்மை நிலையில் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் இனத்தவர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்.
பானமாடி குறித்த அச்சத்திற்குக் காரணங்கள்
* கலாச்சார நம்பிக்கை
* சமுதாய நிலை
* அடக்கப்படுதல் மற்றும் ஒடுக்கப்படுதல்
* கல்வியறிவின்மை
* அறியாமை
* போதிய மருத்துவ வசதியின்மை
* அரசியல் மற்றும் சமுதாயப்பகை
* திருமண/தனிப்பட்ட பிரச்சனைகள்
* உளவியல்
* அமானுஷ்ய மற்றும் தீய சக்திகள் குறித்த நம்பிக்கை
* மூட நம்பிக்கை
பானமாடி குறித்த நம்பிக்கைக்குக் காரணங்கள்
* வறுமை 80 சதவீதம்
* கல்வியறிவின்மை 80 சதவீதம்
* அசைவின்மை 90 சதவீதம் (அதாவது முன்னேறிய இடங்களுக்குச் செல்லாது தன் கிராமத்திலேயே இருத்தல்)
* ஆரோக்கியமின்மை 80 சதவீதம்
* அடக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் 70 சதவீதம்
* மூடநம்பிக்கைகள் மற்றும் மந்திரங்களின் மீதுள்ள நம்பிக்கை 95 சதவீதம்.
சூனியக்காரியாக அல்லது மாந்திரீகவாதியாக நம்பப்படுபவர் யார்?
* அசாதாரணமான, வித்தியாசமான நடத்தையுள்ளவர்
* கிராமத்திற்குப் புதியவர்
* சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் பகையுள்ளவர்கள்
* மற்றவர்களுக்குப் புரியாமல் எதையாவது உச்சரித்துக் கொண்டே இருப்பவர்.
மாந்திரீகவாதி அல்லது சூனியக்காரர் என்று சந்தேகப்படுபவரை துன்புறுத்தும் முறைகள்
* தனிப்பட்டவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ அபராதம் விதித்தல்
* அடித்தல்
* பற்களைப் பிடுங்குதல்
* நாக்கு மற்றும் காதுகளைத் துண்டித்தல்
* கை கால்களை முறித்தல்
* அழகைச் சிதைத்தல்
* சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைத்தல்
* இருப்பிடத்தையும் விளை நிலத்தையும் விட்டு பலவந்தமாக வெளியேற்றுதல்
* கிராமத்தை விட்டு விரட்டப்படுதல்
* அவர்களுடைய சொத்துக்களை ஆக்கரமித்தல்
* பொய்யான குற்றச்சாட்டு
* உறவினர்களைத் துன்புறுத்துதல்
* உயிரோடு எரித்தல்
* மனரீதியாகத் துன்புறுத்தல்
இச்சமுதாயக்கேட்டை சீராக்கும் வழிகள் அல்லது பானமாடி குறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகள்
* உடல்நலம் பேணுதற்குரிய வசதிகளை கிராமப்புறங்களில் அதிகரித்தல்
* நடமாடும் மருத்துவக் குழு
* பானமாடி நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தல் மற்றும் பானமாடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
* மனநல மருத்துவர், மருத்துவ சமுதாய சேவகர்களை மண்டல தலைமையகத்தில் நியமித்தல்
* சமுதாய, பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
* கிராமப்புறங்களில் தொடர்பு சாதனங்களை (தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் போக்குவரத்து) அதிகப்படுத்துதல்
* அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்
* கிராமப்புறங்களில் அதிக அளவில் பள்ளிகளை ஏற்படுத்துதல்
* முறையான / முறைசாரா கல்வியளித்தல்
* பானமாடிக்கு எதிரான பாடங்களைப் பள்ளிப்பாடங்களில் சேர்த்தல்
* பானமாடிக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை ஏற்படுத்துதல்
* பானமாடி குற்றங்களை மற்றவர் அறியும்படி செய்தல்
* குற்றங்கள் செய்வோரைக் கடுமையாக தண்டித்தல்
* விழிப்புணர்வு உண்டாக்க ஊடகங்களைப் பயன்படுத்துதல்
* பானமாடி குறித்த நம்பிக்கைகளை வளர்க்கும் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களையும் தடைசெய்தல்
* அறிவியல் சார்ந்த பயணங்கள் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்
* இளம் பெண்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை உருவாக்குதல்
* கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
* பானமாடியினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல்
மூடநம்பிக்கைகளை நீக்குதலில் அரசின் பங்கு
* விஞ்ஞான வளர்ச்சியை ஆதரித்தல்
* மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்
* பானமாடிக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
* உறுதியான நிலையினை அரசாங்கம் பின்பற்றுதல்
தொடர்புடைய மூலாதாரங்கள்
பானமாடி குறித்த நரசிம்மையா விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டது.
கர்நாடக சட்ட ஆலோசனைக் குழு, இந்தப் பிரச்சனையைக் குறித்து விசாரிக்க ஒரு குழுவினை உருவாக்கியது.
சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரான முனைவர் பி. இராமையா அவர்கள், பானமாடி குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், பானமாடி, பில்லி, சூனியம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. நீண்டகால மூட நம்பிக்கைகளும், அச்சத்தையும், அழிவையும் தரக்கூடிய வதந்திகளுமே பில்லிசூனியம் குறித்த நம்பிக்கையை, பயத்தை, மக்களிடையே உருவாக்குகிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
3 comments:
மூட நம்பிக்கையினால் ஏற்படும் பாதிப்பினையும்
அதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு என்பன
தொடர்பான நல்ல விசயங்களை முன்வைத்துள்ளீர்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு....
இது மர்மம் நிறைந்த பகுதி, இன்னும் பல ஆராய்ச்சிகள் இது விஷயத்தில் தேவை படுகிறது... எவ்வளவோ மக்கள் இன்னும் இவர்களிடம் ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர்..
????
copy adikaik patta paguthi
http://ta.vikaspedia.in/
Post a Comment