Pages

Search This Blog

Friday, September 09, 2011

வயதான இளைஞர்களின் ரகசியம் என்ன?

இளைஞர்கள் பொறாமைப்படும் அளவிற்கு தற்கால வயோதிபர்கள் திகழ்கிறார்கள்.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் அவர்களும் தமது இளமைக்காலத்தில் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததில்லை. அவ்வாறாயின் தற்கால இளைஞர்கள் கவலைப்பட தேவையில்லை என்றே என்னத் தோன்றுகிறது.

சராசரியாக 50 வயது, அதற்கும் மேற்பட்டவர்கள் சிலர் தமது 20 வயதில் உடல் நலத்துடன் இருந்ததை விட தற்போது உடல் நலத்துடன் மிக சுறுசுறுப்பாக செயற்படுகின்றார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வயதான இளைஞர்கள் சிறந்த சரிவிகித உணவுக்கட்டுப்பாடு, அதிக உடற்பயிற்சி, அதிக ஓய்வு நேரம் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் அதன் பயன்களை அனுபவிக்கின்றார்கள்.

தாங்கள் இளம் வயதில் இருந்ததை விட வயோதிப நிலையில் தான் அதிகம் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடுகளைக் கையாள்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

வேலைப்பழு, குடும்பத்தைக் கட்டியெழுப்பல் போன்ற அழுத்தங்கள் இல்லாத காரணத்தால் உடற்பயிற்சிக்கு இவர்களால் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.

அண்மைய ஆய்வொன்றின் படி 50 வயதிற்கு மேற்பட்ட 10 இல் 7 பேர் தமது இளம் வயதை விட தற்போது தான் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அவர்கள் தமது உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிக அக்கறை செலுத்துவதுடன் அதிக பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமது 20 வயதில் பரிந்துரைக்கப்பட்ட 5 பங்கு பழங்கள் காய்கறிகளை உட்கொண்ட தாம் தற்போது 4 மடங்கு அதிகமாக உட்கொள்வதாக சிலரும், தம்முடைய சமூக வாழ்வில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது என கால் பங்கினரும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய முன்கணிப்புகளின் படி ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 65 இலிருந்து இன்னும் 17 வருடங்களால் அதிகரிக்கவும் பெண்களின் ஆயுட்காலம் 20 வருடங்களால் அதிகரிக்கவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையான முன்கணிப்புகள் நமது 20 வயதை விட 50 வயதில் அதிக உடல்சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்பதைத் தான் காட்டுகின்றன.
20 வயதைவிட தற்போது ஆரோக்கியத்தோடு இருப்பதாக உணரும் நபர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக நான்கு தடவைகள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான பிரசித்திபெற்ற வழிகள் நடப்பது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது என்பவை தான்.

சிலருக்கு 50இல் தான் புதிய ஆரம்பம் என  தெரிவிப்பது உண்மை தான் போலும்……..

1 comment:

Post a Comment