ரத்தப் பரிசோதனை உண்டா?
புராஸ்டேட் புற்று நோயை உறுதிப்படுத்த, பி.எஸ்.ஏ., (புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜன்) என்ற ரத்தப் பரிசோதனை முக்கிய பரிசோதனையாக கருதப்படுகிறது. பி.எஸ்.ஏ., அளவு, 4 நானோ கிராமுக்கு அதிகமாக இருந்தால், பிரச்னை இருப்பதாகக் கருதப்படுகிறது.
தடுப்பு முறைகள் என்ன?
ஆண்கள் 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது புராஸ்ட் வீக்கத்தை கண்டுபிடிக்கும் பி.எஸ்.ஏ., ரத்தப் பரிசோதனை செய்ய மறக்கக் கூடாது. தொடர்ந்து, சிறுநீர் பிரச்னை இருந்தால் டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.
* அல்சைமர் மறதி நோயால் உயிருக்கு ஆபத் தில்லை
மாரடைப்பு, பக்கவாதம் போன்று அல்சைமர் நோயால் உயிருக்கு உடனடியாக ஆபத்தில்லை என்று கூறலாம். ஆனால், நோயின் பாதிப்பால் நீண்ட காலத்தில், உயிருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பு இருக்கும். மூளை பாதிப்பால் ஏற்படும் இந்த நோய், பத்து, பதினைந்து ஆண்டுகளில், உடலின் மற்ற உறுப்புகளை பாதித்து, நாளடைவில் உயிருக்கு ஆபத்தாய் முடியும்.
* வயதானவர்களுக்கு தான் அல்சைமர் நோய் வரும்
பொதுவாக, வயதானவர்களுக்கு தான் இந்த நோய் வரும். என்றாலும் அரிதாக, 40 வயதினருக்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அல்சைமர் என்பது ஒரு நோய். வயதானால் இயற்கையாக நரை போடுவது, வழுக்கை விழுவது போன்று, அல்சைமர் இயற்கையான ஒன்றல்ல. அதுபோல், வயதானால் மறதி ஏற்படுவது சகஜம். ஆனால் அதற்கும் அல்சைமர் நோயால் ஏற்படும் மறதிக்கும் அதிக வித்தியாசம் உண்டு.
* அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் அல்சைமர் நோய் வர வாய்ப்பு உள்ளதா?
அலுமினிய பாத்திரங்களில் சாப்பிடுவதால், தண்ணீர் குடிப்பதால், அல்சைமர் நோய் வரும் என கருதப்படுகிறது. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்துவதால், அல்சைமர் வரும் என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. வராது என்றும் நிரூபிக்கவில்லை.
* சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தும் இனிப்புகளால், அல்சைமர் நோய் வரும்.
சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தும் இனிப்புகளால், அல்சைமர் நோய் வரும் என, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இதுபோன்ற இனிப்புகளில், நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு உள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பது, சில விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
*ஆண்களுக்கு தான் அல்சைமர் நோய் வரும் உண்மையல்ல. இரு பாலாருக்கும் இந்த நோய் வரும் என்றாலும், ஆண்களை விட, பெண்களுக்கு இந்நோய் வருவது அதிகம். ஆண்களை விட பெண்கள் அதிக நாள் வாழ்வதும் (சராசரி ஆயுள் அதிகம்) ஒரு காரணம்.
* புராஸ்டேட் நம்பிக்கைகளும் உண்மையும் வயதானால் புராஸ்டேட் புற்றுநோய் வருவது இயற்கை. ஆனால் நோயால் உயிரிழப்பது ஒரு சிலரே உண்மை அல்ல. வயதான எல்லோருக்கும் புராஸ்டேட் சுரப்பியில் பிரச்னை வருவது இயற்கை. ஆனால், புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் எல்லோருக்கும் வருவதில்லை. அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் புராஸ்டேட் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
* ரத்தத்தில் பி.எஸ்.ஏ., அளவு அதிகமாக இருந்தால், புராஸ்டேட் புற்றுநோய் என முடிவு செய்து விடலாமா?
இல்லை. புராஸ்டேட்டில் சாதாரண வீக்கம் இருந்தாலும், ரத்தத்தில் பி.எஸ்.ஏ., அளவு அதிகரிக்கும்.பி.எஸ்.ஏ., அளவு அதிகமாக இருந்தால், திசு பரி சோதனை செய்து, புற்றுநோயை உறுதி செய்ய வேண்டும்.
* புராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படும் புராஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது, புராஸ்டேட் சுரப்பியை சுற்றியுள்ள சில நரம்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, டாக்டரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.
* ஆண்கள் கருத்தடை செய்து கொண்டால் புராஸ்டேட் புற்று நோய் வரும் உண்மை இல்லை. வாசக்டமி கருத்தடை செய்து கொண்டால், புராஸ்டேட் புற்றுநோய் வரும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே ஆண்கள் கருத்தடை செய்ய தயக்கம் வேண்டாம்.
* மீன் சாப்பிட்டால் புராஸ்டேட் புற்று நோய் வரும் தவறு. மீன் சாப்பிட்டால் புராஸ்டேட் வருவதற்கான வாய்ப்பு குறைவு. மீனில் உள்ள ஒமேகா 3 ஆசிட் புற்றுநோயை தடுக்கும். ஆனால், இதர வகை மாமிசங்கள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, புராஸ்டேட் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். இதை அசைவ பிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:
அருமை
Post a Comment