Pages

Search This Blog

Wednesday, October 12, 2011

இரவு நேரக் காதலுரை

களைப்பாற ஊர் தூங்கும் வேளையில்
உரையாடத் துடிக்கின்ற உயிர்
தொலைவில் உள்ள உன்னை
தொலை பேசியில் அழைகின்றது.

ஆசைக் குரல் கேட்டு நான்
அமைதியாகும் வேளை
உயிர் ஊமையாகி
உணர்புகள் மட்டும் தான்
உன்னோடு பேசுகின்றது.

பக்கத்து அறையைத் தாண்டாது
பேசும் சத்தம் - உன்
படுக்கையறைக்குப்  பாய்ந்து வருகின்றது.

பாசம் நிறைந்த உந்தன் பேச்சு
பாலாடை போர்த்தி செல்கின்றது. 
குரலில் என்ன வசியம் உண்டோ
கூறக் கேட்கின்றேன்,

கேட்கும் போதெல்லாம்
மீண்டும் நான் பூப்படைகின்றேன்.  
துண்டித்துப் போகும் தொடர்பினால்
துடிக்க மறுக்கும் இதயத்தை
தலையணையை அணைத்த படிதான்
தூங்கச் செய்கின்றேன்.

என்னை ஆழப் பிறந்தவனே
விரைந்து வாடா கண் முன்னே..!
விடியும் வரை நீயும் நானும்
மிதந்து செல்வோம் விண்மேலே.

3 comments:

அம்பலத்தார் said...

விரகதாபத்தை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... அழகான கவிதை..
ரசித்தேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
பக்கத்து அறையைத் தாண்டாது
பேசும் சத்தம் - உன்
படுக்கையறைக்குப் பாய்ந்து வருகின்றது.

///////////

அழகிய வர்ணனை...

கலக்குங்க மோகன் சார்...

Post a Comment