சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான கோவிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதேபோல தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் கோவில்கள் கட்டப் போவதாகவும் அது கூறியுள்ளது.
ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொன்னாள லட்சுமணய்யா இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் 9 இடங்களில் கோவில்கள் கட்டத் தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக தமிழக அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.
கிழக்குக் கடற்கரைச் சாலை, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் கோவில் கட்டலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3வது வாரத்தில் கோவில் கட்டும் இடங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். அப்போது இடம் தேர்வு செய்யப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment