Pages

Search This Blog

Tuesday, February 14, 2012

ஏழை-எளிய மக்களின் பிரச்னையைத் தொடர்ந்து பேசுவேன்: விஜயகாந்த்




 ஏழை-எளிய மக்களின் பிரச்னை குறித்து தொடர்ந்து பேசுவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட தேமுதிக பொருளாளர் எஸ்.எஸ்.கே. சங்கரலிங்கம் இல்லத் திருமண நிகழ்ச்சி நேற்று அருப்புக்கோட்டையில் நநபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது;

நான் சட்டப் பேரவையில் கை நீட்டிப் பேசியதற்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். கை நீட்டிப் பேசக் கூடாது என்று சட்டப் புத்தகத்தில் இருக்கிறதா? கை நீட்டிப் பேசாமல் எப்படிப் பேச முடியும்?




ஏழை, எளிய மக்களின் பிரச்னை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருப்பேன். என்னைச் சீண்டினால், என் வாயைக் கிளறினால் உண்மைகளை வெளியிட வேண்டி வரும். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகிவிடும்.

ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும்போது பவுடர், சோப் உள்ளிட்டவற்றை வாங்கினால்தான் அரிசி என்கிறார்கள். அதனால்தான் ரேஷன் பொருள்களைப் பொட்டலமாக ஒவ்வொரு வீட்டிலும் வந்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பேரவையில் பேசுவதற்கு அனுமதிப்பதே இல்லை. பின்னர், பொதுமக்கள் பிரச்னை குறித்து சட்டப் பேரவையின் கவனத்துக்கு எப்படி கொண்டுவர முடியும்?.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம். கட்சிக்காக உழைக்கிற அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்  விஜயகாந்த்.

நிகழ்ச்சியில், தேர்தல் பணிக் குழுச் செயலாளரும், விருதுநகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான க. பாண்டியராஜன், மாநிலப் பொருளாளர் சுந்தரராஜன், தலைமைக் கழக உறுப்பினர் பார்த்தசாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வைரமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment