தியானம் என்றால் மனதை ஒருநிலை படுத்துவதாகும்.
சரி மனதை எதில் ஒருநிலை படுத்துவது?
காற்றுக்கு ஒப்பிட்டு மனதை நமது சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். பஞ்ச பூதத்தில் காற்று மனமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் காற்று வடிவமான மனம் அலைபாய்கிறது. அப்போது அதை நிறுத்தினால், நிதானமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.
மனதை எதில் நிலைபெறச் செய்யவேண்டும்?
மனதை உடலில் ஓர் இடத்தில் நிற்க வைத்தால் அங்கு வெப்பம் உண்டாகும். அப்போது அங்கு உயிராற்றல் வந்து அதனுடன் கூடி, மனம் ஒரு திட நிலை பொருள் போல உருவாகி, மணிப்போன்று உருவாகி, நமதுஉடலில் உள்ள அனைத்து உணர்வுகளும், எண்ணங்களும் அதில் சேர்ந்து அந்த மணியை, அதாவது மனதை உணர ஆரம்பிக்கும். அது ஒரு மணியை போல விளங்கும். இதை உருவாக்கும் நிலைக்குத்தான் தியானம் என்று பெயர்.
அப்போது மனதில் எண்ணங்கள் பல இல்லாமல், ஒரே எண்ணம் அந்த உணர்வில் மட்டும் தான் இருக்கும். இந்த தியானப் பயிற்சி தான் எந்த ஒரு விஷயத்தில் மனத்தை செலுத்தினாலும், மனம் அதில் ஒன்று பட்டு, நிலைத்துநின்று, அந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க உதவும். மேலும் நமக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும். இதுதான் தியானத்தின் பலன் ஆகும்.
மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும். தியானத்தின் பலன் ஆறாவது அறிவை, ( மணி உருவாக்குவதை ) அறிவது ஆகும்.
மணியை உற்பத்தி செய்பவன் மனிதன் ஆகிறான்.

4 comments:
நல்ல பகிர்வு சகோ... நன்றி...
ஒரு பத்து நிமிடம் ...ம்ஹீம்... ஐந்து நிமிடம் அமைதியாக நம்மால் எதையும் சிந்திக்காமல் இருக்க முடியுமா...? பயிற்சி + முயற்சி செய்தால் முடியும்...
அறியாதன அறிந்தேன்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவு . முயற்ச்சியுடையார் வெற்றி பெறுவார்
மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும்.
தியானம் பற்றி அருமையான பதிவு
http://tamilraja-thotil.blogspot.com/
Post a Comment