சித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.
- இக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசி" யோகம் செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.
- இப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.
- ஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.
2 comments:
உண்மை தான்...
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி...
கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது
Post a Comment