Pages

Search This Blog

Sunday, October 14, 2012

'ஜூனியர் கேப்டன்' சண்முகப்பாண்டியன்

முதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கேப்டன்' சண்முகப்பாண்டியன்


  விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன், டி.ராஜேந்தர் பாணியில், அதிரடியாக முதல் படத்திலேயே நடிப்பு தவிர வேறு சில வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பப் போகிறாராம்.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து பெரும் ஓட்டம் ஓடிய படம் பிருந்தாவனம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக்க ஏகப்பட்ட பேர் முண்டியடித்தனர். ஆனால் அதை கபால் என பாய்ந்து தனது மகன் சண்முகப் பாண்டியனுக்காக கப்பென்று பிடித்து விட்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனமே இதை சொந்தமாக தயாரிக்கப் போகிறது. இதில் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சமந்தாஆகியோரை பேசி முடித்து விட்டதாக செய்திகள் கசிகின்றன.



இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள்தான். ஸ்பெஷல் மேட்டர் என்னவென்றால் படத்தின் சண்டைக் காட்சிகளையும், டான்ஸ் மேட்டர்களையும் சண்முகப் பாண்டியனே கவனிக்கப் போகிறாராம். அதாவது படத்தின் சண்டைக் காட்சிகளை இவரே செட் செய்யப் போகிறார். எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்பதையும் இவரே முடிவு செய்வாராம்.

 https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSXK1IttaeoRnGHHVDxZ4XJ-0HpeIt5Ecl-i1viY-NAwGjG3Kon



வழக்கமாக தமிழ் சினிமாவில் முன்பு டிஆர் எனப்படும் டி.ராஜேந்தர்தான் இப்படி நடிப்பு தவிர மற்ற பணிகளையும் தானே செய்து அசத்துவார். இப்போது கேப்டன் மகன் சண்முகப் பாண்டியனும் அதே பாணியில் ஏகப்பட் வேலைகளை ஒண்டியாக செய்யப் போகிறாரம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வந்துட்டாரப்பா... வந்துட்டார்...!

மாலதி said...

m sirappu

ARIVU KADAL said...

சினிமாவில் பலவேளைகளை செய்வதைவிட நாட்டுக்கு ஏதாவது செய்தால் நல்லது.

Post a Comment