ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கடந்த 4 நாட்களாக தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் கைதாகியுள்ள 14 சூதாட்டத்தரகர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஸ்ரீசாந்த் தங்கியிருந்த மும்பை சொகுசு ஓட்டல் அறையில் இருந்து போலீசார் லேப்டாப், செல்போன், டைரிகள், ஐபேடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர். ஸ்ரீசாந்த்திற்கு வந்திருந்த இமெயில்களை பார்த்த போது ஐதராபாத்தை சேர்ந்த இயக்குனர் ஒருவர் ஏராளமான மாடல் அழகிகளின் படங்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது.
இவர்களில் சிலர் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்களையும் தங்களது வலையிலேயே வைத்திருக்க அழகிகள் சிலரை புக்கிகள் பயன்படுத்தியதும் ஏற்கனவே நடந்த விசாரணையில் தெரியவந்திருந்தது. இவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புக்கிகள் உயர்ந்த தொழில் நுட்பத்தை கையாண்டுள்ளனர்.
சமூக இணையதளங்கள் மூலம் 3 கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருக்கமாக இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தங்களது திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு அதிக அளவில் பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment