திருடன் ஒருவன் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ராயப்பேட்டையில்
நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில்
வசித்து வருபவர் தியாகராஜன்(45). கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்
குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராயப்பேட்டை
செல்லம்மாள் தோட்டத்தில் வசித்து வருபவன் சைக்கோ விமல் (என்ற) விமல்ராஜ்.
இவன் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளான். வழக்கு தொடர்பாக
விமல்ராஜை விசாரிக்க தலைமை காவலர் தியாகராஜன் அவனது வீட்டுக்கு சென்றார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்று அவனிடம் கூறினார். இதற்கு விமல்ராஜ் மறுத்தார். இதையடுத்து தகராறு ஏற்பட்டது. விமல்ராஜை கண்டித்துவிட்டு தியாகராஜன் ஸ்டேஷனுக்கு புறப்பட்டார். ஆத்திரத்தில் இருந்த விமல்ராஜ் அவரை பின்தொடர்ந்து வந்து, தியாகராஜனின் கழுத்தில் அரிவாளால் வெட்டினான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தியாகராஜன் நிலை குலைந்து அங்கேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தியாகராஜனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அப்போலோ மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தியாகராஜனை அரிவாளால் வெட்டிய விமல்ராஜை போலீசார் பிடித்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தியாகராஜனுக்கு மதுமதி என்ற மனைவி யும், சித்ரா என்ற மகளும் உள்ளனர்.

No comments:
Post a Comment