Pages

Search This Blog

Thursday, July 28, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப்படவில்லை

நாகர்கோவில் : சமச்சீர் கல்வி விவகாரத்தால் 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கும் இதுவரை புத்தகம் வழங்கப்படாததால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2&ல் மொத்தம் 65 தொழிற்பிரிவு பாடங்கள் இருந்தன. இவற்றின் உப பிரிவுகள் நீக்கப்பட்டு தற்போது 12 தொழிற்பிரிவுகள்தான் உள்ளது. இதனால் தொழில்பிரிவுகளுக்கு புத்தகங்கள் அச்சடிக்கும் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

 ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் இதர வகுப்பு மாணவ மாணவியருக்கு கிடைப்பது போன்று தொழிற்பிரிவு மாணவ மாணவியருக்கும் புத்தகங்கள் கிடைத்துவிடும். தற்போது சமச்சீர் கல்வி பிரச்னை இருந்தபோதும் பிளஸ் 1, பிளஸ் 2க்கு இதர பிரிவுகளுக்கு புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் தொழிற்கல்வி பிரிவுக்கு மட்டும் புத்தகங்கள் வரவில்லை. மாணவ மாணவியர் புத்தகமே இல்லாமல் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் முதல் இடைத்தேர்வும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட நாகர்கோவில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நேற்று குமரி கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். எவ்வித பிரச்னையும் இல்லாத பிளஸ் 1, பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கும் புத்தகம் விநியோகம் இதுவரை நடைபெறாதது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment