Pages

Search This Blog

Thursday, July 28, 2011

மதிய உணவுக்கு கூட பள்ளி ஆசிரியர், மாணவர்கள் வெளியில் செல்ல திடீர் தடை

மதிய உணவுக்கு கூட பள்ளி ஆசிரியர், மாணவர்கள் வெளியில் செல்ல திடீர் தடை


சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட வேண்டுமென திமுக அழைப்பு விடுத்துள்ளதை முறியடிக்க அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. மதிய உணவுக்காக கூட பள்ளியிலிருந்து வெளியில் செல்ல திடீர் தடை விதித்துள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வித்திட்டத்தை ரத்து செய்தது. பாடப்புத்தகங்களை விநியோகிக்க தடையும் விதித்தது. ஆனால் உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை ஏற்காமல் அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனால், பள்ளி திறந்து பல நாளாகியும் எந்த பாடத்திட்டம் என்பது முடிவாகாமல் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதை கண்டித்து, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடியாக புத்தகங்கள் வழங்க வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் நாளை வகுப்புகளை புறக்கணிக்குமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராடவும் தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக உளவுத்துறை மூலம் தகவல் அறிந்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் போன் மூலம் தொடர்பு கொண்டு காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை வகுப்பு முடியும் வரை எந்த காரணத்தை கொண்டும் வெளியே செல்லக்கூடாது. மதிய உணவை கையிலேயே எடுத்து வந்துவிட வேண்டும். மதிய உணவை காரணம் காட்டியும் வெளியே செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை கேட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் போராட்டத்தை இந்த உத்தரவின் மூலம் ஒடுக்கிவிட அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசு மிரட்டல் போக்கை கைவிட்டு உடனடியாக  சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள்

No comments:

Post a Comment