அனைத்து மகளிர் காவல் நிலையம், உயர் காவல்துறை அதிகாரிகளின் இலவச விபசார தளங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் பெண் காவலர்களுக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் தரும் பாலியல் தொந்தரவு பற்றி கமிட்டி அமைத்து விசாரணை நடத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் காவலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஈரோடு பெரியார்நகரைச் சேர்ந்த பெண் காவலர் எஸ்.கே.வள்ளி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 14 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வரும் நான், எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 13.8.97 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், அனைத்து துறைகளிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தொடர்பாக கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
1997ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஆயுதப்படை பிரிவில் நான் பணியாற்றினேன். பின்னர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கு சேர்ந்த பிறகு காவலர்கள், அதிகாரிகளின் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இதற்கு நான் சம்மதிக்கவில்லை என்பதால் பல பின்விளைவுகளையும் சந்தித்தேன்.
இந்த வழக்கு எனது நிவாரணத்துக்காக தொடரப்பட்ட வழக்கல்ல. ஆனால் காவல்துறையில் என்னென்ன பாலியல் கொடுமைகள் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அறிய நீதிமன்றம் விரும்பினால், அவற்றை விவரித்து சீலிட்ட கவரில் நான் எழுதிக்கொடுக்கிறேன். ஆண் காவல்துறை அதிகாரிகளால் பெண் காவலர்கள் பாலியல் பொம்மைகளாக எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை என்னால் விளக்க முடியும்.
அனைத்து மகளிர் காவல் நிலையம், உயர் காவல்துறை அதிகாரிகளின் இலவச விபசார தளங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நான் கூற முடியும். எனது கோரிக்கை எல்லாம், பெண் காவலர்களுக்கு ஆண் அதிகாரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்பதுதான்.
அயல்நாடுகளுக்கு படிக்கச் செல்லும் கல்லூரி மாணவிகளுக்கு பாஸ் போர்ட்டுக்கு அனுமதிப்பதற்கு முன்பு அவர்களை உயர் காவல்துறை அதிகாரிகள் பாலியல் பொம்மைகளாக பயன்படுத்துகின்றனர். இது சம்பந்தமாக வந்த தகவலை அடுத்து ஈரோடு நகரைச் சேர்ந்த பெண் காவலர்கள் பலரிடம் உயர் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது காவல் நிலையங்களுக்குள் நடத்தப்படும் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
எனவே பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி கமிட்டி அமைக்கப்பட்டதா? என்று கேட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு 24.12.10 அன்று கடிதம் எழுதினேன். அதை திரும்பப் பெறும்படி வற்புறுத்துகிறார்கள்.
டி.ஜி.பி. லத்திகா சரணுக்கும் 28.2.11 அன்று அதுபற்றி கேட்டு கடிதம் எழுதினேன். பெண்ணாக இருக்கும் அவர்கூட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றக் கூறும் எனது கடிதத்தை பரிசீலிக்கவில்லை. இது பாலியல் தொல்லையை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்.
எனவே காவல் நிலையங்கள், துணை மண்டல அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள், சரக அலுவலகங்கள், தலைமை காவல்துறை அதிகாரிகளின் அலுவலகங்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். பாஸ்போர்ட்டுக்காக மாணவிகளிடம் காவல்துறை அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பது பற்றிய குற்றச்சாற்று குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று பெண் காவலர் வள்ளி தனது மனுவில் கூறியுள்ளார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜரானார். இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

No comments:
Post a Comment