Pages

Search This Blog

Thursday, August 25, 2011

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி இடங்கள் ஆய்வு

திருப்பூர் பகுதியில் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவன விஞ்ஞானிகள் குழுவினர், நேற்றுமேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இத்திட்டத் திற்காக மாநகராட்சிக்கு சொந்தமான மூன்று இடங்களை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். திருப்பூரில், சாலை ஆலைகளிலிருந்து தினமும் வெளியேற்றப்படும் 11 கோடி லிட்டர் சாயக் கழிவு நீரால் ஏற்படும் பிரச்னையும், தினமும் வீதிகளில் கொட்டப்படும் 450 டன்னுக் கும் கூடுதலான குப்பையும் பூதாகரமான பிரச்னையாக உள்ளது. இந்த இரண்டு விதமான பிரச்னைக்கும் தீர்வுகாணும் வகையில், அமெரிக் காவை சேர்ந்த தனியார் நிறுவனம், 1,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்துள்ளது.
அது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தில் நேற்று முன்தினம் அத்திட்டம் குறித்த செயல்விளக்க கூட்டம் நடந்தது.இத்திட்டத்தை தயாரித்துள்ள அமெரிக்க டெக்ஸாஸ் ஏ.எம்., பல்கலை பேராசியர்கள் சீனிவாசன், ஆலன்ஜோன்ஸ், "ஜீரோஸ் இங்க்' நிறுவன ஸ்டீம் கிளர்க் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமியிடம், "குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்' தொடர்பாக விளக்கினர்."திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சேகரமாகும், 1000 டன் குப்பையை சேகரித்து, அதிலிருந்து 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சாயக்கழிவு நீரை "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பது, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான இவ்விரு திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்த 1,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 90 சதவீதம் உலக வங்கி கடனாக வழங்குகிறது. மீதி, 10 சதவீத தொகையான 142 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மின்சாரம் தயாரிப் பதற்கான, குப்பையை மாநகராட்சி வழங்கவேண்டும். அதோடு, இத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இடத்தையும் வழங்க வேண்டும்,' என அக்குழுவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இடுவாய் கிராமத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந் தமான 30 ஏக்கர் நிலத்தை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜவஹர்லால், பொறியாளர்கள் உடன் சென்றனர். கோவில் வழி கிராமத்தில் உள்ள மாநகராட்சி உரத் தொழிற்சாலை இடத்தையும் ஆய்வுசெய்தனர்கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ""குப்பையிலிருந்த மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்குதேவையான, மாநகராட்சிக்கு சொந் தமான இடம்; தனியார் இடத்தையும் அக்குழுவினர் பார்வையிட்டனர். இத்திட்டம் தொடர்பாக, மாநகராட்சி அந்நிறுவனத்திடம் இதுவரை ஒப்பந்தம் ஏதும் போடவில்லை,''என்றார்.

1 comment:

மதுரை சரவணன் said...

maduraiyil atharkkaana mulapporul selavai kanakkittu mudivittanar.. !

Post a Comment