Pages

Search This Blog

Monday, August 01, 2011

ஐ.ஏ.எஸ்.தேர்வும், அணுகுமுறையும்



சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய குடியுரிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் மிகச் சிறந்த மாற்றங்களை மத்திய குடியுரிமைப் பணி தேர்வாணையம் (UPSC) அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்முறையாக முதல்நிலைத் தேர்வில் விருப்பப்பாடம் இல்லாமல் நடத்தப்பெற்ற தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே அளவுகோலைக் கொண்டு மதிப்பிடக்கூடிய புதிய முறையைத் தேர்வாணையம் நடைமுறைப்படுத்தியதை பாராட்டக்கூடிய ஒரு மாற்றமாகக் கொள்ளவும். இதற்கு முன் இருந்த முறையில் விருப்பப்பாடங்கள் (optional subjects) இடையே மதிப்பீட்டில் ஒற்றுமையைக் கொண்டுவர இயலாத சூழ்நிலை இருந்தது.

ஒவ்வொரு விருப்பப் பாடத்திற்கும் தேர்வு பெறும் மதிப்பெண் வெவ்வேறாக இருந்தது. விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை, கேள்வித் தாளின் கடினத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு விருப்பப் பாடத்திற்கும் தேர்வு பெறும் மதிப்பெண் மாறுபடும். 

இதனால் ஒரு சில விருப்பப் பாடங்களே அதிகமான மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்முறை தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட சிசாட் (CSAT) முறை அனைத்து தரப்பு மாணவர்களாலும் எதிர்கொள்ளத்தக்க வகையில் இருந்தது. சிசாட் பாடத்திட்டம் மாணவர்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால் கடின உழைப்பை கொண்ட அனைவரும் வெற்றி பெறலாம் என்ற நிலையே உள்ளது. இம்முறை நடப்பு நிகழ்வுகளை பகுதியில் இருந்த கேள்விகள் அந்த நிகழ்வின் பின்புலத்தைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதாகவும் இருந்தது. மேலும் சுற்றுச்சூழல் பகுதியில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது ஒரு சிறந்த மாற்றமே. சுற்றுச்சூழலோடு கூடிய முன்னேற்றப் பாதையிலேயே நாடு செல்ல விரும்புகிறது என்பதையே இக் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன.

3 comments:

Chitra said...

சுற்றுச்சூழலோடு கூடிய முன்னேற்றப் பாதையிலேயே நாடு செல்ல விரும்புகிறது என்பதையே இக் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன.

...That is a good sign.

M.R said...

நல்லதொரு தகவல் .

பகிர்வுக்கு நன்றி நண்பரே .

நிரூபன் said...

வணக்கம் சகோ, உங்கள் பக்கம் வந்தேன், இப்போது ஆணி அதிகம், இரவு படித்துக் கமெண்ட் போடுறேன்.

Post a Comment