Pages

Search This Blog

Monday, August 01, 2011

விமான பைலட் கோர்ஸ்



மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திராகாந்தி    விமான    பயிற்சி    நிறுவனத்தில் பைலட் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
 
மொத்தம் 125 காலியிடங்கள் (UR63, SC19, OBC34) உள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலம் 15 மாதங்கள். பிளஸ் 2 தேர்வில் கணக்கு, இயற்பியல் பாடங்களில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது.
 
பயிற்சி கட்டணம் ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்தை நான்கு தவணைகளில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, பைலட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இதற்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை 'Indira Gandhi Rashtriya Uran Akademi' என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.
 
எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப மாதிரி, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை www.igrua.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அட்மிட் கார்டு மூலம் தேவையான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
 
ஜூன்.12ம் தேதி வரை அட்மிட் கார்டு கிடைக்காதவர்கள் 0535&2441144, 2441150 ஆகிய பயிற்சி நிறுவன தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

No comments:

Post a Comment