ரஜினி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ராணா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தனர். அவர் சிங்கப்பூரில் இருந்து உடல்நலத்துடன் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவர் நடிப்பதாக இருந்த ராணா குறித்து கேட்டு வந்தனர்.
அவர்களுக்கு பதில் அளிப்பது போல், தற்போது ராணா பட ஆலோசனையில் ரஜினி ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணா படத்துக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினி ஆலோசித்து வருகிறாராம். இந்தப் படத்துக்கான தேதிகள் இறுதிப் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு சரித்திர காலப் படம் என்று முடிவாகியுள்ளதால், அதற்கான படப்பிடிப்புத் தளம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஹைதரபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள முழுத் தளத்தையும் படப்பிடிப்புக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவானதாம். அக்டோபர் 6ம் தேதி முதல் படப்பிடிப்புப் பணிகள் முழுவீச்சில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ராணா படத்தில் ரஜினி மூன்று வேடங்கள் ஏற்று நடிக்கவிருந்தாலும், தீபிகா படுகோன் மட்டுமே இதுவரையில் ஒரு நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment