Pages

Search This Blog

Friday, September 16, 2011

பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை: டில்லியில் அமலாகிறது

தலைநகர் டில்லியில், இனி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிப்பதோடு, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் செலுத்தவும் நேரிடும்.டில்லி மாநில அரசு கடந்த ஜனவரியில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், ஷாப்பிங் மால், நட்சத்திர ஓட்டல், ஓட்டல், பழம் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச் சூழல் மாசுபடுவதால், இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது. இருந்தாலும், டில்லியில் கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டன.


இந்நிலையில், டில்லி மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படும் இடங்களை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது.மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி, அரசு விதித்துள்ள தடையை மீறுவோருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும். பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தனிக் குழுவினர், ஒவ்வொரு இடமாக சென்று, ஆய்வு நடத்துவர்.


பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது குறித்து டில்லி மாசு கட்டுப்பாட்டு குழு செயலரும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயலரும் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். மேலும் காகிதம், சணல் தயாரிப்பு பைகள் ஏராளமாக மாற்றாக கிடைக்கும் என்பதால், தடை விதித்ததால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்பட்டது .

1 comment:

SURYAJEEVA said...

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதை தடை செய்தாலே போதுமே... பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று ஏதாவது தகவல் உண்டா

Post a Comment