Pages

Search This Blog

Friday, September 16, 2011

சென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்?

இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.

எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – "சூடு" வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). "பட்"டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் "no-holds-barred" event-ல் தங்கப்பதக்கம் வாங்கி "வையகமெல்லம் வாரியிறையடா தமிழா" என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது.

கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!
இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன.

ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், "நடைபாதை என்றால் என்ன" என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)

No comments:

Post a Comment