''உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அத்துறையின் அமைச்சர் மு.க.அழகிரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், மழை காரணமாக சென்னை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. ஆனால் இதுவரையில் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாற்றினார்.
இன்றைக்கு பால், பெட்ரோல், காய்கறி விலை உயர்ந்திருக்கிறது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
கருணாநிதியை விரட்ட வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம் என்று கூறிய விஜயகாந்த், நாங்கள் எதிர் கட்சியாக தான் இருக்க விரும்புகிறோம். எதிரி கட்சியாக இருக்க விரும்பவில்லை என்றார்.
சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று கேட்கும் ஜெயலலிதா, கடந்த ஆட்சியில் சட்டப்பேரவைக்கு போனாரா? என்று விஜயகாந்த் கேள்வி கேட்டார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கருணாநிதி கடிதம் எழுதியதைபோல் இன்றைக்கும் ஜெயலலிதாவும் அதை தானே செய்கிறார் என்று அவர் குற்றம்சாற்றினார்.
இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்திருப்பதை பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறிய விஜயகாந்த், தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி தொகையை தமிழகத்திற்கே மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்றார்.
''இன்றைக்கு உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்த துறையின் அமைச்சர் மு.க.அழகிரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. உரத்தின் விலையை குறைக்க அவர் என்ன செய்ய போகிறார்'' என்று விஜயகாந்த் வினா எழுப்பினார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு இன்னும் ஒதுக்காததால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே செல்ல முடியவில்லை என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாற்றினார்.

2 comments:
விஜயகாந்த் இதையாவது சொல்றாறே அதை கண்டு மகிழ்ச்சிதான்...
எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தோடு நடந்துக் கொள்ள வேண்டும்...
விஜயகாந்திடம் இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்...
http://tvrk.blogspot.com/2011/11/blog-post_691.html
இந்த பதிவை இங்கிருந்து தான் தேற்றினேன் என்றால் குறைந்தா போய் விடுவீர்கள்.. தோழர்... இதே பதிவின் கீழ் இவரது பதிவுக்கும் இணைப்பு கொடுக்கலாமே...
Post a Comment