Pages

Search This Blog

Tuesday, November 08, 2011

சுந்தர்சி இயக்கத்தில் விமல்

சுந்தர்சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, சந்தானம்  ஆகியோர் நடிக்கும் புதிய படம் மசாலா கபே. இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடந்து வருகிறது. படப்பிடிப்பே இப்போதுதான் துவங்கியது என்றாலும், வியாபாரம் அதற்குள் முடிந்திருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

அப்படியென்ன நடந்தது என்கிறீர்களா? படத்தின் கதையை கேஷுவலாக யூடிவி நிறுவனத்தின் சிஈஓ தனஞ்செயனிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம் சுந்தர்சி. கதை கேட்கும் போதே விழுந்து விழுந்து சிரித்த அவர், என்ன விலை சொல்றீங்க என்றாராம் பட்டென்று. அங்கேயே உட்கார்ந்து டீலை முடித்துவிட்டார் சுந்தர்சி. சொந்தப்படம் எடுக்கிற இயக்குனர்களுக்கு இருக்கிற நெருக்கடியை படத்தின் துவக்கத்திலேயே களைந்துவிட்ட சுந்தர் சி முன்னிலும் உற்சாகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறாராம்

No comments:

Post a Comment