தி டர்ட்டி பிக்சர் படத்தில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை. எனவே என் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றுக் கதை, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாகி ரிலீசாகியுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். படத்தில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நல்லகுண்டா, போலீசார் வித்யாபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுளளது. இதனைத் தொடர்ந்து வித்யாபாலன் கைது ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வித்யா பாலன் ஐதராபாத் கோர்ட்டில் தனக்கு எதிராக நல்லகுண்டா போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். அதில் தான் அந்த படத்தில் ஆபாசமாக நடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் வித்யாபாலன்.
No comments:
Post a Comment