Pages

Search This Blog

Friday, December 30, 2011

மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!




சுற்றி குடிசைகளாக இருக்கும்போது நாமும் குடிசைதான் கட்டணும் என்று தனக்கு சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் கூறியதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அவரது இந்த பாப்புலாரிட்டியால் வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். கொலவெறிக்குப் போட்டியாக ஒருபாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு என்னென்னமோ காமெடி செய்து வருகிறார்கள்.

ஆனால், ‘கூல்’ தனுஷுக்கோ கேட்காமலே தேடி வருகிறது கவுரவங்கள். ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், ‘கொலவெறி பாடலுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘உங்கள் மாமனார் (ரஜினிகாந்த்) சமீபத்தில் உங்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?’ என்று அவரிடம் கேட்டதற்கு, “சமீபத்தில் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை. என் கல்யாணம் நடந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார். ‘சுற்றி குடிசைகள் இருக்கும்போது, நாமும் குடிசைதான் கட்டணும்” என்றார். அதற்கு அப்புறம் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை” என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

உங்கள் மாமனாரும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் காலம் வருமா? என்ற கேள்விக்கு, “அதை சார் (ரஜினிகாந்த்)தான் சொல்லணும். இதை நான் மருமகனாக சொல்லவில்லை. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில், நானும் ஒருவன். அவரை பிரமிப்பாக பார்க்கிற கூட்டத்தில், நானும் ஒருவனாக சொல்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment