‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்?உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்கு இந்த பாடலை காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேற்று முன்தினம் மதிய உணவு இடைவெளியின்போது பத்திரிகையாளர் சிலர் சென்று சந்தித்தனர். அப்போது, ஜாலி மூடில் இருந்த நிதிஷ், சினிமா பாடல்கள் பற்றி ஆர்வமாக பேசினார்.‘சல்மான் கான் நடித்துள்ள ‘தபாங்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘முன்னி பத்னம் ஹய்’ பாட்டு நன்றாக இருக்கிறது. அதேபோல், கொலவெறிடி பாட்டையும் கேட்டேன்’’ என்று கூறியவர், அருகில் நின்றிருந்த தனது உதவியாளரை திடீரென பார்த்து, ‘ஆமா... கொலவெறிடி என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டார். அதற்கு உதவியாளர், ‘அது தமிழ் வார்த்தை. அதற்கு, கொலை செய்யக் கூடிய அளவுக்கு வெறி என்று அர்த்தம்’ என்று விளக்கினார். அதை கேட்ட நிதிஷ், ‘ஓஹோ... அப்படியா!’ என்றார். உடனே அருகில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர், ‘காதலில் தோல்வி அடைந்த ஒருவன், இந்த பாட்டை பாடுகிறான். என்னை ஏன் இவ்வளவு சித்ரவதை செய்கிறாய்’ என்ற காதலியிடம் கேட்பதுபோல் அவன் பாடுகிறான்’ என்று விரிவாக விளக்கம் கொடுத்தார். |
Friday, February 24, 2012
‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்?
Subscribe to:
Post Comments (Atom)