Pages

Search This Blog

Thursday, February 02, 2012

முதல் முறையாக போலீஸ் யூனிஃபார்ம் மாட்டும் ஷாரூக்




சஞ்சய் தத் கொடுத்த பார்ட்டியில், தனது மதிப்பிற்குரிய எதிரி
(காட்டமாக விமர்சனம் செய்யும் நண்பர்களை இப்படி அழைக்கலாம்!), பிரபல பாலிவுட் இயக்குனர் சிரிஷ் குந்தரை, ரான் ஒன் ரோபோ ஸ்டைலில் கும்மாங்குத்து குத்தியது இப்போது பழைய செய்தி.
அசின் புதுப்படங்கள்

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் பொது கூட்டம் - பிரஸ் மீட்

திவ்யா பரமேஸ்வரன் மாடல் அழகி - படங்கள்

தபசி - அழகான படங்கள் புதுசு

டேனியல் பாலாஜி அடுத்த அவதாரம் - மறுமுகம் பட கலெரி

நடிகை ரிச்சா - படங்கள் புதுசு

சுருதி ஹாசன் - புது தெலுங்கு பட கலெரி

காதலில் சொதப்புவது எப்படி ? - சித்தார்த் இன்னொரு தமிழ் படம் பிரஸ் மீட்

காதலில் சொதப்புவது எப்படி ? - அமர்களமான இசை வெளியீட்டு விழா நிகழ்வு படங்கள்
ஷாரூக் அடுத்து நடிக்கவிருக்கும் படம் என்ன என்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ். மும்மையின் அண்டர்வேல்டு தாதாவாக நடித்துக் களைத்துப் போன ஷாரூக் தற்போது மும்மை அண்டர்வேல்டையும் தாண்டி, அமெரிக்க பல்கலையில் மாணவன் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் இரண்டு இந்திய சைக்கோக்களை கண்டு பிடிக்க முதல்முறையாக காக்கி யூனிஃபார்ம் போட இருக்கிறாராம் தி கிரேட் ஷாரூக்!

போக்கிரி, திருட்டுப்பயலே கே.வி.ஆனந்தின் கோ உட்பட சுமார் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள்  ஏற்கனவே இந்தியில் ரீ-மேக் ஆகிக்கொண்டிருக்கும் சுழ்நிலையில், தற்போது ஷாருக் கான் இரண்டு தமிழ்ப்படங்களின் உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு அவற்றில் எதை ரீ மேக் பண்ணுவது என்று முடிவு செய்ய முடியாமல் குழம்பித் தவித்தவருக்கு ஒருவழியாக போலீஸ் ஸ்டோரி பிடித்து விட்டது.

அது கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய, வேட்டையாடு விளையாடு!
ஷாருக் கைப்பற்றி வைத்திருக்கும் அந்த இரண்டாவது படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'ரமணா'.  தற்போதைக்கு நீங்கள் பேராராசிரியராக நடிக்க வேண்டாம்

என்று தனது நலவிரும்பிகள் கூறியதை அடுத்து, ரமணாவை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ரீமேக் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாராம் ஷாருக்! இவர் போலீஸ் வேஷம் கட்ட இருக்கும் செய்தியை இன்னும் மும்பை மீடியா மோப்பம் பிடிக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்!

2 comments:

Thenammai Lakshmanan said...

பகிர்வுக்கு நன்றி..:)

vanathy said...

பகிர்தலுக்கு நன்றி.

Post a Comment