Pages

Search This Blog

Friday, March 16, 2012

பொறியியல் பட்டப்படிப்புகள்

பொறியியல் பட்டப்படிப்புகளாக கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன
1. வானூர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல்
(Agriculture and Irrigation Engineering)
3. தானியங்கிப் பொறியியல்
(Automobile  Engineering)
4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ்
(Bio –informatics)
5. பி.ஆர்க் - கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு
(B. Arch, - Interior Design.)
6. உயிரிமருத்துவ பொறியியல்
(Bio-Medical Engineering)
7. உயிரித் தொழில்நுட்பம்
(Bio-Technology)
8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல்
(Chemical and Electro Chemical Engineering)
9. கட்டடப் பொறியியல்
(Civil Engineering) 
10. வேதிப் பொறியியல்
(Chemical  Engineering)
11. மண் பொருள் தொழில்நுட்பம்
(Ceramic Technology)
12. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
(Computer  Science  and  Engineering)
13. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
(Electronics  andCommunication  Engineering.)
14. மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்.
(Electrical  and  Electronics Engineering)
15. மின்னியல் மற்றும் கருவியியல்
(Electronics  and  instrumentation  Engineering)
16. உணவுத் தொழில்நுட்பம்
(Food  Technology)
17. பேஷன் டெக்னாலஜி
(Fashion Technology)
18. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்
(Geo – informatics)
19. கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்
( Instrumentation  and  Control)
20. தொழிற் பொறியியல்
(Industrial  Engineering)
21. தகவல் தொழில்நுட்பம்
(Information Technology)
22. இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி
(Industrial Bio-Technology)
23. தோல் தொழில்நுட்பம்
(Leather   Technology)
24. உற்பத்திப் பொறியியல்
(Manufacturing Engineering)
25. மரெய்ன் பொறியியல்
(Marine Engineering)
26. மெட்டிரியல் என்ஜினியரிங்
(Material Science and Engineering)
27. எந்திரவியல் பொறியியல்
(Mechanical  Engineering)
28. எந்திர மின்னணு பொறியியல்
(Mechatronics)
29. மருத்துவ மின்னணுவியல்
(Medical Electronics)
30. உலோகப் பொறியியல்
(Metallurgical  Engineering)
31. சுரங்கப் பொறியியல்
(Mining Engineering)
32. பெட்ரோவேதிப் பொறியியல்
(Petro  Chemical  Technology)
33. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழில்நுட்பம்
(Petroleum Refining and Petrochemical Technology)
34. பெட்ரோலியம் பொறியியல்
(Petroleum Engineering)
35. பாலிமர் தொழில்நுட்பம்
(Polymer  Technology)
36. மருத்துவ தொழில்நுட்பம்
(Pharimaceutical Technology) 
37. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம்.
(Rubber and Plastic Technology)
38. நெசவுத்தொழில் வேதியியல்
(Textile  Chemistry)
39. நெசவுத்தொழில்நுட்பம்
(Textile  Technology)
40. அச்சுத் தொழில்நுட்பம்
(Printing Technology)
41. உற்பத்திப் பொறியியல்
(Manufacturing Engineering)
பிற பொறியியல் படிப்புகள்
1. தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பொறியியல் ( Fire and Safety Engineering)
2. சர்க்கரைத் தொழில்நுட்பம்
(Sugar Technology)
3. நேவல் ஆர்க்கிடெக்ட்சர் மற்றும் ஓசன் என்ஜினியரிங்
(Naval Architecture and Ocean Engineering.)
4. விண்வெளி தொழில்நுட்பம்
5. நானோ டெக்னாலஜி
(Nano Technology)
6. ஏரோஸ்பேஸ்
(Aerospace)
7. அகௌஸ்டிக்ஸ்
(Acoustics)
8. அணுப் பொறியியல்
(Nuclear Engineering)
9. டெய்ரி டெக்னாலஜி
(Dairy Technology)
10. எனர்ஜி என்ஜினியரிங்
(Energy Engineering)
11. எண்ணை மற்றும் தாள் தொழில்நுட்பம்
(Oil & Paper Technology)
12. பல்ப்ஸ் மற்றும் பேப்பர் டெக்னாலஜி
(Pulps & Paper Technology)
13. போக்குவரத்து தொழில்நுட்பம்
(Transportation Technology)
பொறியியல் பாடப்பிரிவுகள் விளக்கம்.
1. பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடப்பொறியியல் (B.E.Civill  Engineering)
சிவில் என்ஜினியரிங் என அழைக்கப்படும் பொதுப் பொறியியல் பிரிவில் கட்டிடம் கட்டுதலை உள்ளடக்கிய கட்டுமானப் பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடம் பொறியியல்) படித்தவர்கள் எம்.இ.,எனப்படும் (மாஸ்டர் ஆ.ப் என்ஜினியாஜீங); மாஸ்டர் ஆப் டெக்னாலஜி எனப்படும். எம்.டெக் படிப்பிலும் சேர்ந்து மேற்படிப்பு படிக்கலாம்.
2. பி.இ எந்திரவியல் பொறியியல் (Mechanical  Engineering)
பி.இ எந்திரவியல் என அழைக்கப்படும் மெக்கானிக்ல் என்ஜினியரிங் படிப்பு தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. இந்த படிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எந்திரங்கள், கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. தற்போது கம்ப்ïட்டர் பற்றி கல்வியும், அதன் பயன்பாடும் இந்தக்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிகால் வாரியங்கள் மத்திய மாநில அரசு வழங்கும்வேலை வாய்ப்புகள் போன்றவைகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்ளன.
3. பி.இ மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல(Electrical and Electronics Engineering)

இந்தப்படிப்பில் மின்சாரம் சம்பந்தப்பட்ட இந்திரங்கள், மின் உபகரணங்கள், மின்உற்பத்தி ஆகியவற்றைப்பற்றி கற்றுத்தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு சிமெண்ட் ஆலைகள், ராணுவ தளவாட நிறுவனம், தேசிய வெப்ப மின் ஆற்றல் நிறுவனம், பாரத் கனரக மின் சாதன நிறுவனம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. கம்ப்ïட்டர் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.
4. பி.டெக் வேதிப் பொறியியல் (Chemical  Engineering)
பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் என்பது பெட்ரோலியம், உரம், சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ள படிப்பாகும். கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு உள்ளது.
5. பி.இ.பொதுப் பொறியியல் புவித் தகவல் வரைவு (B.E.Geo Informatics)
புவித்தகவல் வரைவு இயல் என்னும் பிரிவு பொதுப் பொறியியல் துணையோடு இணைந்த பிரிவு ஆகும். இந்தியாவில் சில கல்வி நிலையங்களில் மட்டும் இப்பிரிவு உள்ளது. இப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வான்வெளித்துறை, நேஸனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி சர்வே ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.
6. பி.இ உற்பத்தி பொறியியல் (Production  Engineering)
உற்பத்திப் பொறியியல் துறை என்பது இயந்திரவியல் துறையைப் போன்றதே ஆகும். இருப்பினும் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், பொருட்களின் உற்பத்திக்குப் பயன்படும் சாதனங்கள், உற்பத்தி சாதனங்களை ஆராய்ந்து தெளிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள் போன்றவற்றை இப்படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பை முடித்தவார்ளுக்குத் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

7.பி.இ சுரங்கவியல் பொறியியல் ( Mining Engineering) 
பி.இ.மைனிங் என்ஜினியரிங் படிப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத்துறை சுரங்க நிறுவனங்களிலும் தனியார் சுரங்க நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. சுரங்க சட்டத்தின்படி பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதால் பெண்கள் இத்துறைப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
8. பி.டெக் தோல் தொழில் நுட்பம் ( Leather  Technology)
இத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தோல் வேதிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தோல் பதனிடும் தொழிற்கூடங்கள், தோல் ஆராய்சசி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
9. பிடெக் நெசவுத் தொழில் நுட்பம் (Textile  Technology)
பி.டெக்டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்னும் நெசவுத் தொழில் நுட்பப் பட்டம் பெற்றவர்கள் தேசிய ஜவுளி நிறுவனம் மற்றும் தனியார் அரசு நெசவுத் தொழிற்சாலைகளிலும் வேலை பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.
10. பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் (Aeronautical  Engineering)
இந்த பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், ஐ.எஸ்.ஆர்.ஓ.விமான தொழில் நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
11.பி.இ. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் Electronics  and  Communication  Engineering)

இந்தப் படிப்பை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொயிறியல் கல்லூரிகள் நடத்துகின்றன. இந்தப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்கள் தேசிய விமானவியல் கூடம், தேசிய மின்னணுவியல் தொழிகம், பாரத அணுக்கதிர்; ஆராய்ச்சி நிலையம், பாரத மின்னணு தொழிற்சாலை போன்ற பல அமைப்புகளில் வேலை பெற வாய்ப்பு உள்ளது. இவை தவிர பல தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு ஏராளம் உள்ளன.
12. பி.இ.கணிப்பொறிஅறிவியல்மற்றும்பொறியியல் (Computer Science andEngineering)

இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படிப்பு தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொறியில் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் உள்ளன. விப்ரோ, எச்.சி.எல. போன்ற அமைப்புகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வழங்குகின்றன.
13. தொழிலியல் பொறியியல் (Industrial  Engineering)
தொழிற்சாலையில் பணிபுரியத் தேவையான பணியாளர்களையும், இயந்திரங்களையும் எந்தெந்த வகையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைஅறிந்து கொள்ளவும் இந்தப் படிப்பு உதவியாக அமைந்துள்ளது.
14.அச்சுத் தொழில் நுட்பம் (Printing  Technology
பி.இ.பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பில் அறிவியல், கணிதம், பேக்கேஜிங் (Packaging) Ùமட்டீரியல்; சயின்ஸ் (Material  Science) இயந்திரவியல், மின்சாரவியல் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பெரிய அச்சகங்கள், பத்திரிக்கைகள், விளம்பர நிறுவனங்கள் அச்சு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது.
11.பி.ஆர்க் படிப்பு (B.Arch)

கட்டிடக்கலை பொறியியல் படிப்பை
(Architecture Engineering) கல்லூரி மூலம் கொடுப்பதே பி.ஆர்க் படிப்பின் நோக்கமாகும். இந்தப் படிப்பில் நவீன அறிவியல் கூடம், உடல் ஊனமுற்றோர் நிலையம் அமைத்தல், தேசிய விமானம் நிலையம், கலாச்சார நிலையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலிய முக்கியமான கட்டிடங்களை உருவாக்கத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பை முடித்தவர்களுக்குப் பொதுப்பணித்துறை, ரயில்வே, வீட்டு வசதி வாரியம், தபால் தந்தி இலாக்காக்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
12.பி.இ.மின்னணு மற்றும் கருவிநுட்பவியல் (Electronics  and  Instrumentation)

பி.இ.எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டுருமென்டேசன் என்னும் மின்னணு மற்றும் கருவி நுட்பவியல் படிப்பில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை, பொருள் தயாரித்தல் சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு
(Pollution Control) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
13 தகவல் தொழில்நுட்பம் (Information  Technology)

இன்றைய உலகில் மிகவும் அதிகவேக வளர்ச்சியடைந்து வருவது தொழில்நுட்பத் துறையாகும் . கம்ப்ïட்டர் உதவியுடன் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அனுப்பும் முறை தகவல் சேகரிப்பு மற்றும் சேமிப்பு பற்றியும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் போன்றவையும் இப்படிப்பில் இடம் பெறும்.

No comments:

Post a Comment