Pages

Search This Blog

Tuesday, March 20, 2012

நாம் பிறந்த மாதங்கள் நம் வாழ்க்கைநிலையை தீர்மானிக்கின்றதாம்…..?

பிறப்பும் இறப்பும் மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டவையல்ல.
குறித்த திகதியில் குறித்த மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான். ஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் அவர்களின் வாழ்க்கை நிலைகளுக்கும் வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் முடிவு  கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து  மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுகள் ஆங்கில மாதத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
ஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்குதல் அதிகம் இருந்ததாக ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர் நோயும் மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் வாதம் தொடர்பான பாதிப்புக்களும்; இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம்  காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் இந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்றே கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நோய்களுக்குள்ள தொடர்புகளைப் போன்று  குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும் எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் தொழில்; நிலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி மேற்;கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும் பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஒரு ஆய்வின் முடிவுகள் மட்டுமே. இதனைப் படித்துவிட்டு நமக்கான நோய்களையோ நம் குழந்தைகளுக்கான கல்விநிலைகளையோ இதன் மூலம் தீர்மானிப்பவர்களாக மாறிவிடக்கூடாது. ஒரு சிலருக்கு இது பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் விடலாம்.

1 comment:

Unknown said...

அப்படியா

Post a Comment