சென்னை: இன்டர்நெட்டில் தன்னை ஆபாசமாக சித்தரித்து படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி சின்மயி போலீஸ் கமிஷன ரிடம் புகார் அளித்தார். சினிமா பாடகி சின்மயி (22). இவர் சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இன்று காலை, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சின்மயி கூறியிருப்பதாவது: கடந்த 2 வருடமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன்.
அதில், சிலர் என்னுடைய உருவ படங்களை நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து வெளியிட்டதுடன், பல்வேறு ஆண்களுடன் பல்வேறு கோணத்தில் அறைகுறை ஆடையுடன் இருப்பது போல¢ படங்கள் வெளியிட்டுள்ளனர். அத¤ல் வெளியிட்டுள்ள கருத்துகளும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் உள்ளன. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மும்பை, சாய்பாபா டெலிபிலிம்சை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மேடை நிகழ்ச்சியில் பாடியதற்காக எனக்கு ரூ.17 லட்சம் தரவேண்டும். அவர் அந்த பணத்தை தரவில்லை. அதையும் பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மனுவில் சின்மயி கூறியுள்ளார்.
1 comment:
ஆபாசமாக படம் எடுத்து/சித்தரித்து வெளியிட்டது மிகவும் மோசமான செயல். இந்த பிரச்சினைக்கு இன்னும் எத்தினை எத்தினை பேர் கைது செய்ய போகிறார்களோ? சில அப்பாவிகளும் இதில் சிக்குவார்கள்.
Post a Comment