புதுடில்லி: தண்ணீர் இன்றி தவிக்கும் பயிரை காப்பாற்ற அவசரமாக தண்ணீர்
திறந்து விட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என
கர்நாடகா தெரிவித்து விட்டது. நீண்ட காலமாகவே இது போன்று அடம் பிடிக்கும்
கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நிர்ப்பந்தம் தர வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் இது குறித்து நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்; அரசின் விதிகளுக்கு கட்டப்பட்டு மாநில காங்கிரஸ் அரசு செயல்படும் என்றார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஆணை மத்திய அரசுஇதழில் வெளியிடப்பட்ட பிறகும் இந்த மாநில அரசு தொடர்ந்து தனது முடிவை மாற்ற மறுத்து வருகிறது. காவிரி தண்ணீர் பிரச்னை குறித்து தற்காலிக கண்காணிப்பு குழு கூட்டம் இன்று கூடியது. மத்திய நீர்வளத்துறை செயலர் சர்க்கார் தலைமையில் நடந்தது. கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தண்ணீர் தர முடியாது: கூட்டத்தில் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கும் நிலையில் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு 10 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டித்தான் முடிவு செய்வோம் என்றனர். 4 வார கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
ஜூன் 12 ல் மீண்டும் கூடுகிறது: இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலர் சர்க்கார் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த கூட்டம் மீண்டும் வரும் 12 ம் தேதி நடக்கிறது . இதில் தமிழக அரசின் கோரிக்கை குறி்தது முடிவு எடுக்கப்படும். என்றார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்; இரு மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக காவிரி ஆணைய இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். விதிகளுக்கு கட்டுப்படும்.இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment