தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உறுப்பினர்களான, ஏ.இளவரசன், கனிமொழி, திருச்சி சிவா, பி.எஸ்.ஞானதேசிகன், மைத்ரேயன், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
வரும் ஜூன் 10ம் தேதி திங்கள் அன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 17 திங்கள் கிழமை
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜூன் 18 செவ்வாய்க்கிழமை
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசிநாள் : ஜூன் 20 வியாழக்கிழமை
தேர்தல் நாள் (தேவைப்பட்டால்) : ஜூன் 27 வியாழக்கிழமை
தேர்தல் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நாள்: ஜூன் 27 வியாழன் மாலை 5 மணி
தேர்தல் நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டிய நாள் : ஜூன் 29 சனிக்கிழமை.
- இதனை இன்று (ஜூன் 4) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
1 comment:
தகவலுக்கு நன்றி...
Post a Comment