ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 5,661 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் ஈட்டியதைக் காட்டிலும் லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டு நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 4,851 கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ. 83,689 கோடி. முந்தைய காலாண்டில் எட்டியதைவிட 37 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் வர்த்தகம் ரூ. 51,737 கோடியாக இருந்தது. எண்ணெய் சுத்திகரிப்பில் ஒரு பீப்பாய்க்கு 10.3 டாலர் வருமானம் கிடைக்கிறது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 7.3 டாலராக இருந்தது என்று நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். பாரிஸ் சுகர்ஸ்: இந்நிறுவனம் முதல் காலாண்டில் ரூ. 27.07 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 31.07 கோடியாகும். நிறுவன செலவினம் முதல் காலாண்டில் 53 சதவீதம் உயர்ந்து ரூ. 132.64 கோடியாக இருந்தது. விற்பனை 90 சதவீதம் அதிகரித்து ரூ. 127.17 கோடியானது. முந்தைய ஆண்டு இது ரூ. 67.07 கோடியாக இருந்தது.
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்: வேதாந்தா குழுமத்தின் அங்கமான ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ. 1,639.73 கோடி லாபம் ஈட்டியது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவன லாபம் ரூ. 1,008.43 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருமானம் ரூ.9,824 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 65.81 சதவீதம் அதிகமாகும். பட்னி கம்ப்யூட்டர்ஸ்: தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பட்னி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வருமானம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 93 சதவீதம் சரிந்து ரூ. 10.80 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 147.3 கோடியாகும். நிறுவன நிதி நிலை 2012-ல் ஸ்திரமடையும் என்று நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பனீஷ் மூர்த்தி தெரிவித்தார்.
ஐ-கேட் நிறுவனம் 2010-ம் ஆண்டில் பட்னி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 82.4 சதவீத பங்குகளை வாங்கியது. ஐ-கேட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக பட்னி கம்ப்யூட்டர்ஸ் செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு 1 கோடி டாலர் சம்பளம் வழங்கியதால் நிறுவன வருமானம் குறைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஓரியண்டல் வங்கி: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவன லாபம் ரூ. 354.70 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 363.30 கோடியாகும். வங்கியின் வட்டி வருமானம் 3.69 சதவீதம் குறைந்து ரூ. 1,018 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 1,057 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 28 சதவீதம் அதிகரித்து ரூ. 3,290 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 3,046 கோடியாகும். வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 2,42,770 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 2,09,156 கோடியாக இருந்தது.

No comments:
Post a Comment