Pages

Search This Blog

Thursday, August 25, 2011

மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,மதுரை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரையில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. இது இளங்கலை மற்றும் முதுகலை கல்வியோடு 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்சமயம், 4 ஆண்டு இளங்கலைப் படிப்பு, உணவுத் தொழில்நுட்பத்தை தனிப் பாடமாக கொண்ட மனையியல் கல்வியோடு, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் – உணவியியல் மற்றும் ஊட்டச் சத்துக்களை கொடுக்கப்படுகிறது. தற்சமயம் உணவியல் மற்றும் ஊட்டச்சத்தில் ஊட்டச்சத்து தரத்திற்கென வேறுபட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றன. இந்த கல்லூரி திருச்சி – மதுரை சாலையில் மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ளது.

தோற்றம்:

இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது, மனையியல் துறையோடு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் அனுமதியோடு, இதர துறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற முறையில் செயல்பட ஆரம்பித்தது. 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து முதுகலை பட்டமானது, மதுரைக்கு மாற்றப்பட்டு, கல்லூரியானது வலுப்பெற்றது. பின் 1988-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நோக்கம்:
  • மனை மேலாண்மை, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து, மனித மேம்பாடு, நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி மற்றும் விரிவாக்க கல்வி போன்றவற்றில் அடிப்படை அறிவைக் கொடுத்தல்.
  • சமுதாய ஊட்டச்சத்து, மனித மேம்பாடு, நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி மற்றும் விரிவாக்க கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சிறிய தொழிற்சாலைகள் மற்றும் பெண் தொழில் முனைவோர்களை சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கத்தின் மூலம் உருவாக்குகிறது.
  • மனையியலின் அனைத்து பிரிவுகளிலும், குறைந்த செலவுடன் கூடிய புதிய தொழில் நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் இருக்கின்ற பழையவற்றை மேம்படுத்துதல்.
  • கிராம மக்களுக்கு, தகுந்த தகவல் தொடர்பு முறைகள் மூலம், தொழில்நுட்பங்களை வழங்குதல்
  • ஊட்டச்சத்து மேலாண்மையில் சிறந்த பட்டதாரிகளை உருவாக்குதல்
  • தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளை நிறைவேற்றக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குதல்
  • உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் மற்றும் சிப்பம் அமைத்தல் போன்றவற்றில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல்.
  • மனையியலில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம், போன்றவற்றில் கணிணி உபயோகித்தல்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி

3.8.2002 அன்று 128 ஆவது மேலாண்மை வாரியக் கூட்டத்தில், மதுரை, மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மனித மேம்பாடு, குடும்ப வள மேலாண்மை, மனையியல் விரிவாக்கம், உள் வடிவமைப்பு மற்றும் அழகு தொழில்நுட்பம் (Apparel Designing and Fashion Technology). உணவியல் மற்றும் ஊட்டச்சத்து போன்ற துறைகள் உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த துறைகளில் பல்வேறு வகை படிப்புகள் இளங்கலை கல்விக்கு நடத்தப்படுகின்றன. மேலும் இங்கு முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் வழங்க வேறுபட்ட பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், மாணவர் கல்விக்கென பல்வேறு வகை வசதிகளான, ஆய்வுக்கூடம் மற்றும் ஆய்வுக் கருவிகள் செய்து தரப்பட்டுள்ளது. உணவு சுத்திகரிப்பு, அறுவடை பின் தொழில்நுட்பம் மற்றும் சமுதாய மற்றும் உபயோகமான ஊட்டச்சத்து குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு வசதிகளுடன் நூலக வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள்:
  • தோட்டங்களில் பறிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தகுந்த சிப்பம் அடைப்பு முறைகள் மூலம், அதனை நெடுநாள் வைத்திருக்கலாம். அந்த தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துதல்.
  • பழவகைகள் மற்றும் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள்
  • பேக்கரி தொழில்நுட்பங்கள்
  • சோயாமாவு, கொழுப்பு எடுக்கப்ட்ட சோயா மாவு, புரத கூட்டுப்பொருள், பழைய உணவுகளை நொதிக்க வைத்தல் மற்றும் புதிய பொருள்கள் தயாரித்தல் போன்றவற்றை சோயா கொண்டு செய்தல்.
  • உடனடியாக சமைக்க உதவும் உணவுப் பொருள்கள்.
  • தானியங்களிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரித்தல்.
  • மீன், முட்டை மற்றும் பால் இவற்றிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு.
  • குறைந்த மதிப்புள்ள பழவகையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு.

1 comment:

Chitra said...

தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க.

Post a Comment