Pages

Search This Blog

Wednesday, September 21, 2011

இரண்டாவது பசுமைப் புரட்சி குறித்து உலக உச்சி மாநாட்டில் விவாதம்.

உலகளவில் உணவு உற்பத்தி மற்றும் விலை குறித்து கவலைகள்.  ரோமாபுரியில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் உணவு உச்சிமாநாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சியின் தேவை என்பது குறித்து அதிக அளவில் வலியுறுத்தப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விவசாய உற்பத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வளர்சியே பசுமை புரட்சி என்று அழைக்கப்படுகிறது. முதலாம் பசுமை புரட்சிக்கு பயன்படுத்திய உக்திகள் இரண்டாம் பசுமைப் புரட்சி காலத்திலும் எடுபடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ரோமில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளான்மை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உலக உணவு மாநாட்டில் உலக அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன. ரோமில் விவாதிக்கப்பட்ட விடயங்களுக்கு உடனடி தீர்வு ஏதும் கிடையாது என்று கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு முக்கிய காரணமான விஞ்ஞானியாக இருந்தவரான டாக்டர். எம். எஸ். சுவாமிந்தாதன்.
 
புரட்சி போன்ற கோஷங்களை எழுவதன் மூலம் இதற்கான தீர்வு மிகவும் எளிது என்று கூறிவிடமுடியாது. பசுமை புரட்சி ஏன் வெற்றி பெற்றது என்பதை அறிய அதன் வெவ்வேறு கூறுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்த முறைகளில் பயிற்களில் செய்யப்பட்ட மாற்றங்களா அல்லது விளைச்சல் அதிகரிப்பா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சுவாமிநாதன்.

ஒரு குறிப்பிட்ட அளவுடைய நிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட விவசாயத் தொழிலாளர்களை கொண்டு மாற்றங்களை அலச வேண்டும். ஆப்பிரிக்காவில் உள்ள விவசாயிகளை கலந்து பேசி அதன் அடிப்படையில் அவர்களின பங்களிப்புடன் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறித்து ஆராய்வதற்காக ரோமில் கூட்டப்பட்ட உலக உணவு உச்சிமாநாடு தற்போது முடிவு பெற்றுவருகிறது.  இப்பிரச்சனை குறித்த மேல் நடவடிக்கைகள் குறித்து ரோமில் கலந்து பேசிய குழுக்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மூன்று பில்லியன் டாலர்கள் அளவிலான உதவிக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

1 comment:

SURYAJEEVA said...

அப்படியே விளைவிக்கும் விவசாயியை எண்ணி பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்..

Post a Comment