வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடுமாம்.
ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படுமாம். குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும்.
பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது
இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும் .மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment