Pages

Search This Blog

Friday, December 30, 2011

தாவணி பெண்ணாக சினிமாவில் நடிக்க விரும்பினேன் ?

இயக்குனர் பாலாவின் ”அவன் இவன்” படத்தில் பெண் பொலிசாக நடித்த ஜனனி ஐயர்,
கொலிவுட் படங்களில் பிசியாக நடிக்க தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தன் மனதுக்கு பிடித்த ஷாப்பிங், பேஷன் அனுபவங்களை ஜனனி பேசியுள்ளார்.



எனக்கு பிடித்த, ரொம்ப நாள் நீடித்து உழைக்கும் பொருட்களை கவனமாக பார்த்து வாங்குவேன். மனம் போன போக்கில் இஷ்டப்படி எந்த உடைகள், ஷூக்களை வாங்கி குவிக்கற பெண் நானில்லை. இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்தமான அத்துனையும் என் ”வார்ட்ரொப்பில்” நிரம்பி வழியும்.

வீட்டை தாண்டி நான் வெளியே வரும் போது தேவதை மாதிரி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் அதிகப்படியான கவனம் எடுத்து ஆடைகளையும் மேக்கப் பொருட்களையும் தேர்வு செய்கிறேன்.


தாவணி பெண்ணாக சினிமாவில் நடிக்க விரும்பினேன். ஆனால், முதல் படமான அவன் இவனில் பொலிஸ் சீருடையில் நடிக்க வைத்துவிட்டார்கள். உண்மையில், எனக்கு மொடர்ன் ட்ரென்ட் உடைகள் மீது தான் கொள்ளை ஆசை. ஏதாவது விசேடம் என்றால் பாரம்பரிய உடைகளை அணிவேன்.

சினிமா உலகில் பட ஓடியோ வெளியீடில் தாவணி மங்கையாக மின்னியிருக்கிறேன். என்னோட பேஷன் ரசனைக்கு தகுந்த பொருட்களை பாங்காக்கில் இருந்து வர வழைத்து பயன்படுத்தியுள்ளேன். பொருளின் விலையை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படுவதில்லை.


நான் ஸ்டைலாக உடை அணிய என் டிசைனர் நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். பாரிஸ், ஸ்விட்சர்லாந்த் என பறந்து போய், எனக்கு பிடித்த பேஷன் பொருட்களை வாங்கி குவிக்க விரும்புகிறேன். நான் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள், ஸ்டைல் பேக்ஸ் ஆகியவை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் என்று பேசிய ஜனனி, கடைசி வரை தன் பேஷன் குரு யார் என்பதை கூறாமல் மறைத்து விட்டார்.

No comments:

Post a Comment