நீலம்' புயல் தாக்கியபோது சென்னை பட்டினப்பாக்கம் அருகே பிரதீபா காவேரி என்ற எண்ணை கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த என்ஜினீயர்கள் கப்பலில் இருந்து படகில் குதித்து உயிர் தப்ப முயன்றனர். அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த கப்பல் என்ஜினீயர் ஆனந்த் மோகன்தாஸ் கடலில் மூழ்கி இறந்தார்.
மற்றொரு படகில் சென்ற
கப்பல் என்ஜினீயர்கள் நிரஞ்சன், கமித்கர் ராஜ் ரமேஷ், ரிசப்ஜாதவ்,
கிருஷ்ணசந்திரா, ஜோமன் ஜோசப் ஆகிய 4 பேர் மாயமானார்கள்.
அவர்களை
கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் படகுகள் மூலமாகவும் தேடும்
பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை ஜேப்பியர் பாலம் அருகில்
ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடல் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி
அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அந்த
உடலை உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள். அது மும்பையைச் சேர்ந்த கப்பல்
என்ஜினீயர் கமித்கர் ராஜ்ரமேஷ் உடல் என்று தெரிய வந்தது.
நேற்று
மதியம் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் மற் றொரு உடல்
மீட்கப்பட்டது. அந்த உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது. அது அரக்கோணத்தைச் சேர்ந்த கப்பல் என்ஜினீயர் நிரஞ்சன் உடல்
என தெரியவந்தது. அவரது உடலை நிரஞ்சனின் தந்தை கோதண்டபாணி அடையாளம்
காட்டினார்.
நிரஞ்சனின் உடல் மீட்கப்பட்ட அதே
நேரத்தில் துறைமுகம் கடல் பகுதியில் மற்றொரு கப்பல் என்ஜினீயர் உடலை கடலோர
காவல் பாதுகாப்பு படையினர் மீட்டனர். அந்த உடல் ஸ்டான்லி அரசு
ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அது பெல்காமைச் சேர்ந்த என்ஜினீயர்
ரிஷப் ஜாதலின் உடல் என்று தெரிய வந்தது.
நேற்று
இரவில் மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணூர் துறைமுகம் பகுதியில்
மற்றொரு ஊழியரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடலை மீஞ்சூர் போலீசார்
மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரவு முழுவதும்
உடல் அடையாளம் காணப்படாமல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலேயே இருந்தது.
அந்த
உடலை அடையாளம் காண்பதற்காக மீதமுள்ள 2 என்ஜினீயர்களின் பெற்றோர்களை
போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்து சென்றனர்.
அப்போது
அது கேரள மாநிலம் காசியாமூரைச் சேர்ந்த கப்பல் என்ஜினீயர் கிருஷ்ணா
சந்திரா உடல் என்று தெரிய வந்தது. அவரது உடலை தந்தை சந்திரசேகர் அடையாளம்
காட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு
5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது. இந்த உடலும் மீஞ்சூர் பகுதியிலேயே
கரை ஒதுங்கியது. அந்த உடலை மீஞ்சூர் போலீசார் மீட்டு பொன்னேரி
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அது ஜோமன் ஜோசப் உடலாக இருக்கலாம் என்று
தெரிகிறது.
2 comments:
thanks
மிகவும் வருத்தப்படும் சம்பவம்....
Post a Comment