ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம் என்றார் தீபிகா படுகோனே.
அவர் மேலும் கூறும்போது :-
ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும்.
உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ
அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட
குறையவில்லை.
‘கோச்சடையான்’ படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்தியாவில் இருந்து வெளியாகும் சர்வதேச படம் என்ற பெயரை ‘கோச்சடையான்’ பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
என்னைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளேன். அந்த வீட்டை யாரோ எனக்கு பரிசாக தந்துள்ளதாக பேசுகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டை வேறு ஒருவர் கொடுத்ததாக சொல்வது சரியல்ல. சினிமா உலகம் எப்படிப்பட்டது என்று தெரிந்துதான் இந்த தொழிலுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
2 comments:
இப்ப தானே விஷயம் வந்திருக்கு...! இன்னும் சூடு பிடிக்கும்...
படம் எப்படி இருக்கும் என்று இப்போது சொல்லமுடியாது, ட்ரைலர் வரட்டும். கொஞ்சமாவது கணிக்கமுடியும். இவங்களைப் பற்றி பாலிவுட்டில் இன்னும் நிறைய செய்திகள் அடிப்படுகிறது.
Post a Comment