பிராங்க்பர்ட்: ஜெர்மனி, பிராங்க்பர்ட் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் வருடாந்தர உற்சவம் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15 நாள் உற்சவம் நடைபெற இருக்கின்றது. கொடிஏற்ற விழாவில் சிறுப்பு நிகழ்ச்சியாக, இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்ற சஞ்சீவ் பட்டச்சார்யா அவர்களின் மணிப்புரி நடனம் நடைபெற்றது.
22ம் தேதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும், 23ம் தேதி ஞாயிறு தீர்த்தோற்சவமும், 24ம் தேதி திங்கள் திருப்பொன்னூஞ்சலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நாட்களில் அம்பிகை அடியார்கள் அம்பிகையை தரிசித்து அம்பாளின் அனுக்கிரகங்களைப் பெற்றேகும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் மதியமும் மாலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment