Pages

Search This Blog

Friday, November 11, 2011

ஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11!

1-11-11 இல்லை 11-11-11? இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது[1] பிறந்த நாள்! அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ஹேஷ்யமும் உள்ளது. இப்படி 1-1-1 என்று வரும் நாட்கள் ஐஷின் வாழ்வில் முக்கியமாக இருக்கும் போல இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், மக்களுக்கு ஐஸ் / ஐஷ் என்றாலே குளிர்ந்து விடுகிறது. நல்ல வேளை, மற்ற விஷயங்களில் எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம். ஆனால், ஜனங்கள் இவ்விஷயத்தில் படு உஷாராக இருக்கிறார்கள்.  எண்களின் சேர்க்கையில் விசேஷம் இருக்கிறதோ இல்லையோ, “பெட்” வைப்பவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இன்றே குழந்தை பிறந்து விடும் என்று வேறு பெட்! நல்லவேளை, இன்னும் 10 நாட்கள் பொறுக்க வேண்டும் போல இருக்கிறது.

மூன்றாவது தடவை வெற்றிகரமாக கருவுற்று கர்ப்பமான ஐஷ்வர்ய பச்சன்: இரண்டு முறை அபார்ஷன் ஆகி, மிகவும் வருத்தத்துடன் இருந்த பச்சன் குடும்பத்தினர் மூன்றாவது தடவையாக கருவுற்ற போது, மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தனர். முதலில் மற்றும் இரண்டாவது தடவை அபார்ஷன் ஆனபோது, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டபோது, அபிதாப் பச்சன் கொதித்தே போய் விட்டார்[2]. அதுமட்டுமல்லது, சில பத்திரிக்கைகள் அவருக்கு, ஏதோ ரகசிய வியாதி இருக்கிறது என்று கூட செய்திகள் வெளியிட்டபோது[3],  எப்படி எங்களது மறுமகளைப் பற்றி அப்படி செய்திகளை போடுவீர்கள் என்று கோபத்துடன் நிருபர்களைக் சாடினார்[4]. ஆனால், ஜாதகம் சரியாக இல்லை என்று பல கோவில்களுக்குச் சென்று தம்பதியர் பரிகார பூஜைகளை செய்தனர். இப்பொழுதும், மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்து வருகின்றனர். இருப்பினும் ஊடகங்கள் விடுவதாக இல்லை, பின் தொடர்ந்து எப்படியாவது புகைப்படம் எடுத்து விடுவது என்று இருந்தன. கோவில்களுக்கு சுற்றி வரும்போது, பச்சன் தம்பதியரைப் பிடித்தே விட்டனர்., வேறு வழியில்லாமல், கர்ப்பத்துடன் வயறுடன் இருந்த ஐஸ் போஸ் கொடுத்தார், படத்தை எடுத்து விட்டனர்[5]. வயறு உருண்டு திரண்டு இருந்தது என்றெல்லாம் எழுதத்தான் செய்தனர்.

நடிகையின் சீமந்தம்:  பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யாவின் சீமந்தம் (கோத் பரை / ‘godh bharai’ என்று இந்தியில் சொல்கிறார்கள்) கோலாகலமாக நடைபெற்றது. இத்தனை பிரபலங்களை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட் பெண் நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்[6]. உலக அழகியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அபிஷேக்பச்சனை திருமணம் 20-04-2007 அன்று செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மும்பையில் அவருக்கு சீமந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.   அவரது மாமியார் ஜெயா பச்சன் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

சீமந்த விழாவை முன்னிட்டு பச்சன் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற்பகல் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது.  ஐஸ்வர்யா ராய் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். அந்த சேலையில் தாய்மையில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு அவர் காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர்.

நடிக-நடிகையர்களின் கூட்டம்[7]: இத்தனை பிரபலமான நட்சத்திரங்களை இதற்கு முன்னர் ஒரே இடத்தில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர விருந்தாளிகள் விழாவுக்கு பெருந்திரளாக வந்திருந்தனர்.  பழம்பெரும் நடிகை சய்ராபானு ஐஸ்வர்யா தம்பதிக்கு தங்ககாசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், நடிகைகள் ஊர்மிளா, டிவிங்கிள் கன்னா, சோனாலி பிந்த்ரே, நீத்துகபுர், நீலம் கோத்தாரி, பூனம் சின்ஹா மற்றும் கரன் ஜோகர் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.  இந்த விழாவின் போது ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் முகத்தில் பூரிப்பு காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர்.

விழா முடிந்தவுடன், தம்பந்தியர் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டனர்[8]. ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்[9]. ஐஸ்வர்யாவுக்கு நவம்பர் முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11-11-11 அன்று குழந்தை பிறக்குமா? நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர். நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.

பல கோடி பெட்டிங் ஆரம்பம்[10]… முன்பு அபிதாப் பச்சன் திவாலா ஆகும் நிலையில், பெங்களூரில் உலக அழகி போட்டி நடத்த அனுமதி கொடுத்து, அவரைக் காப்பாற்றியது காங்கிரஸ் அரசு. ஐஷை மறுமகளாக்கிக் கொண்டதே பணம் பண்ணுவதற்குத் தான் என்றும் பேசிக்கொண்டார்கள்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

காரணம், “எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே,” என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர். நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

No comments:

Post a Comment