Pages

Search This Blog

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, September 17, 2012

டாஸ்மாக் பாரில் ஒரு டம்பளர் ரூபாய் 5



டாஸ்மாக் கடை34 
      அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஆனால், விலை பட்டியலை    டாஸ்மாக் கடைகளில் ஒட்டாமல் தங்கள் விருப்பம் போல் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர் கடைகளில். 

பொதுமக்கள் தினமும் கூலி வேலை செய்து பணத்தை டாஸ்மாக் கடைகளில் அணியாயமாக செலவிடுகின்ற அவல நிலை உள்ளது. அதே போல் அரசு பிளாஸ்டிக்கை தடை செய்து அதை உபயோகித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர் அனால் டாஸ்மாக் பாரில் ஒரு டம்பளர் ரூபாய் 5 க்கு விற்பனை செய்கின்றனர் இங்கு தடைக்கு விலக்களிக்க பட்டுள்ளதா பார்களில் அணியமாக பணம் பறிப்பதை தடை செய்யுமா இதற்க்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதா

டாஸ்மாக் தடை செய்யுமா அரசு அல்லது மக்களின் வயிதெரிச்சலில் வரும் பணத்தில் இலவசங்கள் வழங்கி   கொண்டிருக்குமா தமியாக அரசு.

Sunday, April 08, 2012

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!


தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது.

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பயோகேஸ்

இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். ” மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் “பயோகேஸ்” அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.

எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.

இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் “பயோகேஸ்” பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.

எரிவாயு கலன் அமைப்பு

இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும்.

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.

மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.
எங்கெல்லாம் அமைக்க முடியும்?

அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும்.
இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.

இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது.

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்” என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 28, 2012

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.




நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

Saturday, March 24, 2012

துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை


 
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.

டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எச்சரிக்கை: இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.