Pages

Search This Blog

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, July 30, 2011

மிளகு மோர்சா ம்பார்

தேவையான பொருட்கள் :
மிளகு - 25 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், பொட்டுக் கடலை மாவு - 50 கிராம், கெட்டியான மோர் - 3 கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா - 50 கிராம், வெந்தயம் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 2 கப், நெய் - 100 கிராம், பெருங்காயம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், உப்பு (தேவைக்கேற்ப), கருவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை :


முதலில் துவரம் பருப்பை குழைய வேகவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.


அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும். கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
 

எலுமிச்சம்பழம் ரசம்

தேவையானவை:
எலுமிச்சம்பழம் : 2
சீரகம : 1 டீஸ்பூன்
பூண்டு : 2
உப்பு, மல்லித்தழை : சிறிதளவு
தக்காளிப்பழம : 1 டீஸ்பூன்
வற்றல : 2

செய்முறை:

1/2 லிட்டர் தண்ணீ¡¢ல் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாழித்து நுரைகூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்க்கவும். டிப்ஸ்; இது உடம்புக்கு நல்லது. எலுமிச்ச பழத்துக்கு பதிலாக புளி சேர்த்து தயார் செய்யலாம்.
 
சுண்டைக்காய் குழம்பு

செய்முறை:

200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும் 2 பொ¢ய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உ¡¢த்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளிக்காய்ச்சல், அரைத்த சீரகம், 1 சிட்டிகை மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். மிதமான தீயில் வைக்கவும். சுண்டைக்காய் குழம்பில் எண்ணெய் மிதந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
 

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பி¡¢யாணி

தேவையானவை:

பி¡¢யாணி அ¡¢சி  : 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி·பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் : 3 டம்ளர்,
நெய : 2 டேபிள் ஸ்பூன்,
பொ¢ய வெங்காயம் : 2
முந்தி¡¢ப் பருப்பு : 20
கிராம்பு : 6
லவங்கப்பட்டை : 6
ஏலக்காய : 6
வெள்ளைப் பூண்டு உ¡¢த்தது : 10 பல்லு
பொ¢ய தேங்காய : 1/2 மூடி
உப்பு : 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 2

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமாகத் தண்ணீர் வைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை அம்மியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கனமான வெங்கல உருளி அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்தி¡¢ப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் அம்மியில் வைத்துத் தட்டிய பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அ¡¢சியைக் கழுவிப் போட வேண்டும். தீயைக் குறைத்து நிதானமாக எ¡¢யவிட வேண்டும்.

அ¡¢சி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும். இதற்கு வேண்டிய அளவு வெங்காயத் தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம்.

பீட்ரூட் மிளகு சாதம் :

தேவையானவை:
பீட்ரூட் : 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
மிளகு : 2 ஸ்பூன்
கரம் மசாலா : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை : தேவையான அளவு
சமையல் எண்ணெய் : 1 டீஸ்பூன்
மாங்காய் தூள : 1 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பொடியாக அ¡¢ந்த பீட்ரூட் சேர்த்து வதக்கிய பின் கறிவேப்பிலை, உப்பு, மிளகு சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு வேகவைத்தபின் கரம் மசாலா மாங்காய்த் தூள் போட்டு கலந்துபின் இறக்கி சாதத் தோடு போட்டு கலந்தபின் பா¢மாறவும். கவர்ச்சிகரமான இந்த சாதத்தின் கலரும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.