ஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழைப்பு தான நம்மை நன்றாகவும் வெற்றி வீரராகவும் வாழ வைக்கும். உழைப்பின் சிகரம் வெற்றியாகத்தான் இருக்க முடியும்.
நாம் விரும்புவது எதுவும் உழைப்பின் மூலமே பெற இயலும்.அயாரத உழைப்பு, கடின உழைப்பு இவையே நம்முடைய ஜீவகீதமாக வாழ்வின் மூச்சாக இருக்க வேண்டும். நாம் எடுத்து கொண்ட செயலில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று உழைத்தால் நிச்சயம் அதனை அடைந்தே தீருவோம். உன்னதமான உழைப்பை எப்படிஞ் செயல்படுத்துகிறோமோ அதன்படிதான் வாழ்க்கை அமையும். உலகம் ஒரு கடல், வாழ்க்கை என்பது கடலில் செல்லும் கப்பல் .அந்தக் கப்பலை ஓட்டச் செய்வது உழைப்புதான்.
1 comment:
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்..
நல்ல பகிர்வு.
Post a Comment